MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அன்று பஸ் டிரைவர் மகன்... இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி - ஒரே படத்தால் ஓஹோனு மாறிய யாஷ் வாழ்க்கை..!

அன்று பஸ் டிரைவர் மகன்... இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி - ஒரே படத்தால் ஓஹோனு மாறிய யாஷ் வாழ்க்கை..!

சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்த ஹீரோக்களில் ராக்கி பாய் யாஷும் ஒருவர், கேஜிஎஃப் படம் மூலம் அவரது வாழ்க்கையே அப்படியே தலைகீழாக மாறியது. அதைப்பற்றி பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Apr 01 2026, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Yash Net Worth
Image Credit : X

Yash Net Worth

'ராக்கிங் ஸ்டார்' யாஷ், இன்னைக்கு இந்திய சினிமாவையே ஆட்டிப் படைச்சிட்டு இருக்காரு. வெறும் கன்னட சினிமாவுல மட்டும் வலம் வந்த யாஷை, இப்போ ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடுது. 'டாக்ஸிக்' படம் மூலமா குளோபல் மார்க்கெட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கிற நம்ம ராக்கிங் ஸ்டார், இந்த உயரத்துக்கு வளர்ந்து வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதைதான். அப்போ, யாஷ் எப்படி இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனாரு? அவர் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

ராக்கிங் ஸ்டார் யாஷ், இப்போ உலகம் முழுக்க கொண்டாடப்படுற ராக்கி பாய். யாஷோட சினிமா வாழ்க்கையையோ அல்லது நிஜ வாழ்க்கையையோ பார்த்தா, 'KGF-க்கு முன்', 'KGF-க்கு பின்' அப்படின்னு ரெண்டா பிரிக்கணும். ஏன்னா, KGF வர்றதுக்கு முன்னாடி யாஷ் இருந்த விதமே வேற... அந்தப் படம் வந்த பிறகு அவர் வளர்ந்த விதமே வேற.

26
யார் இந்த யாஷ்?
Image Credit : X

யார் இந்த யாஷ்?

ஆமாம், யாஷ் ஒரு சாதாரண பஸ் டிரைவரோட மகன் என்பது உங்க எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தான். சினிமா மேல இருந்த ஆசையால, நம்ம கோயம்பேடு மாதிரி பெங்களூருல இருக்குற மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட்ல படுத்து உறங்குனது, பெங்களூருவோட கோடம்பாக்கம்னு சொல்லப்படுற காந்திநகர்ல வேலைக்காக அலைஞ்சது, தியேட்டர் வாசல்ல என்னோட கட்-அவுட்டும் ஒருநாள் நிக்கணும்னு சபதம் போட்டது எல்லாமே யாஷோட சினிமா வாழ்க்கையோட ஒரு அங்கம் தான். ஆனா, KGF வந்த பிறகு யாஷ் எப்படி வளர்ந்தாரு? எத்தனை கோடி சொத்துக்கு அதிபதி ஆனாருங்குறதுதான் மீதிக் கதை.

Related Articles

Related image1
டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Related image2
டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் யாஷ்... வைரலாகும் டாக்ஸிக் படத்தின் அடிபொலி டீசர்..!
36
வாழ்க்கையை மாற்றிய கேஜிஎஃப்
Image Credit : Asianet News

வாழ்க்கையை மாற்றிய கேஜிஎஃப்

KGF, யாஷோட வாழ்க்கையில ஒரு புதிய அத்தியாயம். அந்தப் படத்துல, அம்மாவோட ஆசையை நிறைவேற்ற மகன் எப்படி தங்கத்தை வேட்டையாடுறான், ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குறான்னு ஒரு கதை இருக்கும். இதே கதை யாஷோட நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும்னா அது மிகையாகாது. அந்தப் படத்துல வர்ற சில வசனங்கள், யாஷோட சாதனைக்கு கனெக்ட் ஆகும். 'போர்வைக்கு தகுந்த மாதிரி காலை நீட்டு'ங்கிற பழமொழிக்கு பதிலா, 'போர்வையையே பெரிதாக்கிடலாம்'னு ஒரு டைலாக் வரும். அது யாஷோட நிஜ வாழ்க்கைக்கு அப்படியே பொருந்துது. ஏன்னா, யாஷ் போர்வைக்கு தகுந்த மாதிரி காலை நீட்டல, போர்வையையே பெரிதாக்கி வளர்ந்து நின்னாரு.

46
யாஷ் சொத்து மதிப்பு
Image Credit : Asianet News

யாஷ் சொத்து மதிப்பு

ஆமாம், KGF படத்தோட இந்த டைலாக்கை நிஜ வாழ்க்கையில செயல்படுத்தின ராக்கி பாய், தன்னைச் சுற்றி ஒரு பெரிய கோட்டையையே கட்டியிருக்காரு. அந்த கோட்டைக்கு அவர்தான் 'பாய்'. யாஷ் வளரணும், கன்னட சினிமாவையும் வளர்க்கணும்னு களம் இறங்கின அந்த வெறி, இன்னைக்கு அவரை இந்திய சினிமா இண்டஸ்ட்ரியோட சுல்தானா மாத்திருக்கு. கன்னட சினிமாவுல மிகப்பெரிய பணக்கார நடிகர் யாருன்னு கேட்டா, அது யாஷ்தான்னு ஒட்டுமொத்த உலகமும் சொல்லும். ஏன்னா, யாஷோட இப்போதைய சொத்து மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

56
யாஷ் கார் கலெக்‌ஷன்
Image Credit : Asianet News

யாஷ் கார் கலெக்‌ஷன்

யாஷ், KGF மற்றும் KGF சாப்டர் 2 படங்களுக்காக சுமார் 8 வருஷம் செலவழிச்சிருக்காரு. ஆனா, அதுல கிடைச்ச பலன் எவ்வளவு தெரியுமா? 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து. அதுமட்டுமில்ல, சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொகுசு கார்கள், பிரம்மாண்ட பங்களாக்கள்னு பட்டியல் நீளுது. இவரிடம் இப்போ ரெண்டு பென்ஸ் கார்கள், ஒரு ரேஞ்ச் ரோவர், அப்புறம் ரன்வீர் சிங் கிட்ட இருக்குற மாதிரியே 3 கோடி ரூபாய் மதிப்புள்ள லெக்ஸஸ் கார் ஒண்ணும் இருக்கு. இந்த கார்களோட மொத்த மதிப்பே கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் வரும்.

யாஷ், KGF படத்துக்கு முன்னாடி, அதாவது 'ராமாச்சாரி' படம் வரைக்கும் ஒரு படத்துக்கு 3 முதல் 5 கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் வாங்கிட்டு இருந்தாரு. ஆனா, ஒரே ஒரு KGF, ராக்கிங் ஸ்டாரோட வாழ்க்கையையே மாத்திடுச்சு. இன்னைக்கு யாஷ், சினிமா தவிர வெறும் விளம்பரங்கள் மூலமாவே நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதிக்கிறார். இப்போ 600 முதல் 700 கோடி ரூபாய் பட்ஜெட்ல ஒரு படத்தையும் தயாரிச்சிட்டு இருக்காரு.

66
பாக்ஸ் ஆபிஸ் சி.இ.ஓ
Image Credit : Asianet News

பாக்ஸ் ஆபிஸ் சி.இ.ஓ

யாஷ், பெங்களூருல சொத்து வாங்கிப் போட்டிருக்காரு. ஹாசன்ல நிலம் வாங்கியிருக்காரு. மைசூருல சொத்து இருக்கு. மும்பைல ஒரு வீடு இருக்கு. இந்திய பாக்ஸ் ஆபிஸோட சி.இ.ஓ யாருன்னு கேட்டா, அது யாஷ்தான். 'டாக்ஸிக்' படம் மூலமா ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வசூல் செய்யணும்னு இலக்கு வெச்சிருக்கிற யாஷ், அதை நிச்சயம் சாதிப்பாருங்கிற நம்பிக்கை இருக்கு. மொத்தத்துல, ஒரு சாதாரண பஸ் டிரைவர் பையனான யாஷ், இன்னைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்படும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவருடைய உழைப்பு தான்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யாஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெகட்டிவ் கமெண்ட்ஸ்க்கு நோ டென்ஷன்! "கத்துப்போம்.. ஜெயிப்போம்" - கென் கருணாஸின் நச் பதில்!
Recommended image2
தமிழ்நாட்டில் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 மூவீஸ் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
கோமதி உடல்நிலை பற்றி டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்; கதறி அழுத பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related Stories
Recommended image1
டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் யாஷ்... வைரலாகும் டாக்ஸிக் படத்தின் அடிபொலி டீசர்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved