நண்பேண்டா! ரஜினி முதல் விஜய் வரை... ரியல் லைஃப்பிலும் நட்போடு இருக்கும் நம்ம கோலிவுட் ஸ்டார்ஸ் பற்றி தெரியுமா?
நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இடையேயான ரியல் லைப் நட்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நட்பு என்பது மிகவும் முக்கியமானது. அந்த நட்பை கொண்டாடும் தினம் தான் ஆகஸ்ட் 6. சர்வதேச நண்பர்கள் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நட்புடன் பழகி வரும் பிரபலங்கள் பற்றியும், அவர்களது நட்பு பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ரஜினி - கமல்
தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான் நடிகர்கள் என்றால் அது ரஜினி - கமல் தான். பல தசாப்தங்களாக நடித்து வரும் இவர்களது நட்பு 16 வயதினிலே படத்தில் தொடங்கியது. அன்று தொடங்கி இன்றுவரை அதே நட்புடன் பழகி வரும் ரஜினி - கமல் ஒரு சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் பொன்னியின் செல்வன் பட இசை வெளியீட்டு விழாவில் ஒன்றாக வந்து கலந்துகொண்டு தங்களது நட்பு பற்றி சிலாகித்து பேசி இருந்தனர்.
விஜய் - அஜித்
விஜய்யும், அஜித்தும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்களது ரசிகர்கள் எலியும், பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டு இருந்தாலும், இவர்கள் இருவருமே எப்போது நட்புடன் தான் பழகி வருகின்றனர். ராஜாவின் பார்வையிலே படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது தொடங்கிய இவர்களது நட்பு, இன்று வரை தொடர்ந்து வருகிறது. அஜித் பற்றி பல மேடைகளில் விஜய் பேசி இருக்கிறார். குறிப்பாக மாஸ்டர் பட ஆடியோ லாஞ்சில் கோர்ட் சூட்டில் வந்த விஜய், நண்பர் அஜித் மாதிரி வரலாம்னு தோனுச்சு அதனால் இப்படி வந்தேன் என பேசியது மிகவும் வைரல் ஆனது.
இதையும் படியுங்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன பருந்து, காக்கா கதைக்கு அர்த்தம் இதுதானா?.. பற்ற வைத்த புளூ சட்டை மாறன்!
விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவருமே சமகால நடிகர்கள் ஆவர். இவர்கள் இருவரும் சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமாகி அசுர வளர்ச்சி கண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி இருப்பதாக பேசப்பட்டாலும், தாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதை சமீபத்தில் வெளியான மாவீரன் படம் மூலம் ஆணித்தனமாக சொல்லினர். அப்படத்திற்காக பின்னணி குரல் கொடுத்திருந்த விஜய் சேதுபதி, நட்புக்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை.
விஷால் - ஆர்யா
விஷால், ஆர்யா இருவருமே அவன் இவன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் பல வருட நண்பர்கள் ஆவர். நட்புக்காக இவர்கள் இருவரும் பல படங்களில் கேமியோ ரோலும் நடித்திருக்கின்றனர். கடைசியாக எனிமி படத்தில் விஷாலும், ஆர்யாவும் இணைந்து நடித்திருந்தனர். விரைவில் இவர்கள் காம்போவில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாம்.
சிம்பு - சந்தானம்
சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே சிம்பு தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களது நட்பு தொடர்ந்து வருகிறது. சமீபகாலமாக இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து அரட்டை அடிப்பதுண்டு. இதனை சந்தானமே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். உண்மையான நட்புக்கு இவர்களும் ஒரு எடுத்துக்காட்டு தான்.
இதையும் படியுங்கள்... அடடேய்... கவினின் வருங்கால மனைவி மோனிகா; லாஸ்லியாவின் தோழியா? இதென்னடா புது டுவிஸ்டா இருக்கு!