- Home
- Cinema
- BB Ultimate : அட்ராசக்க... வைல்டு கார்டு என்ட்ரி இவுங்களா!! அப்போ இனி பிக்பாஸ் அல்டிமேட் களைகட்டப்போகுது!
BB Ultimate : அட்ராசக்க... வைல்டு கார்டு என்ட்ரி இவுங்களா!! அப்போ இனி பிக்பாஸ் அல்டிமேட் களைகட்டப்போகுது!
பிக்பாஸ் அல்டிமேட்டில் ஏற்கனவே 14 போட்டியாளர்கள் உள்ள நிலையில், தற்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த பேவரைட் போட்டியாளர் ஒருவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளார்.

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை நிகழ்ச்சியில் நடுவே சில போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக அனுப்பப்படுவது வழக்கம். அந்த பார்முலாவை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பின்பற்ற உள்ளனர். இதுவரை 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள நிலையில், தற்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த பேவரைட் போட்டியாளர் ஒருவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளார்.
அவர் வேறுயாரும் இல்லை... ஓவியா தான். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, நடிகை ஓவியா கலந்துகொள்வதாக இருந்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினால், அவரால் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது. தற்போது சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த அவர், பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல ரெடி ஆகிவிட்டாராம்.
இன்னும் சில தினங்களில் அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா, அந்நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார். அவருக்கென சமூகவலைதளங்களில் ஆர்மி எல்லாம் ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.