MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 1000 கோடி வசூல் அள்ளிய முதல் தமிழ் இயக்குநர்.... விஜய்க்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் - யார் இந்த பிரபலம்?

1000 கோடி வசூல் அள்ளிய முதல் தமிழ் இயக்குநர்.... விஜய்க்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் - யார் இந்த பிரபலம்?

தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி வசூல் என்பது எட்டாக்கனியாக இருந்தாலும், அந்த மைல்கல்லை முதன்முதலில் எட்டிப்பிடித்த தமிழ் இயக்குநர் ஒருவரின் குழந்தைப்பருவ புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 11 2026, 01:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Director Atlee Kumar Childhood Photo viral
Image Credit : instagram

Director Atlee Kumar Childhood Photo viral

சிவகார்த்திகேயன் நடித்த “முகப்புத்தகம்” என்ற ஷார்ட் பிலிம் மூலம் கவனம் பெற்றவர் அட்லீ. அதன் பின்னர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்ட அவர், 2013ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் ஆகியோர் நடித்த அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.

25
தளபதிக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த அட்லீ
Image Credit : Instagram

தளபதிக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த அட்லீ

முதல் படத்தின் வெற்றியால் செம சந்தோஷத்தில் இருந்த அட்லீக்கு அடுத்த படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி திரைப்படம் விறுவிறுப்பான திரைக்கதை, உணர்வுபூர்வமான காட்சிகள், கமர்சியல் அம்சங்கள் என எல்லாம் கலந்த பக்கா படமாக இருந்ததால் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி, விஜய் – அட்லீ கூட்டணியை மேலும் வலுப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களும் உருவாகி, இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தன. இதன் மூலம் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனராக அட்லீ தன்னை நிலைநிறுத்தினார்.

Related Articles

Related image1
குட் நியூஸ் சொன்ன இயக்குநர் அட்லீ - பிரியா ஜோடி... வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்..!
Related image2
அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா? கூலி பட லைஃப் டைம் வசூலை விட அதிகம்
35
அட்லீ இயக்கி 1000 கோடி வசூல் அள்ளிய படம்
Image Credit : Atlee/Instagram

அட்லீ இயக்கி 1000 கோடி வசூல் அள்ளிய படம்

தமிழில் சாதனை படைத்த பின்னர், பாலிவுட்டிலிருந்து அட்லீக்கு அழைப்பு வந்தது. அதிலும் ஷாருக் கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது அவரது பயணத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது. சுமார் நான்கு ஆண்டுகள் உழைப்பில் உருவான ஜவான் திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களுக்கே எட்டாக்கனியாக இருந்த இந்த இலக்கை, தனது ஐந்தாவது படத்திலேயே அடைந்தது அட்லீக்கு தனித்துவமான மைல்கல்லாக அமைந்தது.

45
அட்லீ அடுத்த படம்
Image Credit : instagram

அட்லீ அடுத்த படம்

தற்போது பான்-இந்தியா அளவில் அதிக எதிர்பார்ப்பு உருவாக்கும் இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்கிறார். பல முன்னணி நடிகர்கள் அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவர் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

55
வைரலாகும் அட்லீயின் குழந்தைப்பருவ புகைப்படம்
Image Credit : instagram

வைரலாகும் அட்லீயின் குழந்தைப்பருவ புகைப்படம்

இந்நிலையில், அட்லீயின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோட்-சூட் அணிந்து புன்னகையுடன் டிப்-டாப் போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, அதிக லைக்குகள் மற்றும் பாராட்டுகளை பெற்று வருகிறது. சிறுவயதிலிருந்தே தன்னம்பிக்கையுடன் காட்சியளித்த அந்த சிறுவன், இன்று இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்திருப்பது அவரது உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் சான்றாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அட்லீ
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அஞ்சலியின் ஆட்டம் ஆரம்பம்... மீண்டும் காதல் வலையில் சிக்கினாரா சரவணன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image2
ஜனனி மேல் கைவைத்த தேவசகாயத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி - அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image3
வேலையை தூக்கி எறியச் சொல்லும் சோழன்... நிலா எடுத்த முடிவு என்ன? அய்யனார் துணை சீரியலில் அதிரடி திருப்பம்
Related Stories
Recommended image1
குட் நியூஸ் சொன்ன இயக்குநர் அட்லீ - பிரியா ஜோடி... வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்..!
Recommended image2
அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா? கூலி பட லைஃப் டைம் வசூலை விட அதிகம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved