'ஊ சொல்றியா மாமா' கோரியோகிராபர் கணேஷ் ஆச்சார்யா மீது பாலியல் புகார்..
பாலிவுட் நடன இயக்குந நடிகருமானர் கணேஷ் ஆச்சார்யா(Ganesh Acharya) மீது நடனக் குழுவில் இருந்த இளம் பெண் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்.

ganesh acharya
நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் மற்றும் இந்தியாவின் பாலிவுட்டில் செயலில் உள்ள நடிகர் என பன்முகம் காட்டி வருபவர். இவர் பாலிவுட்டில் ஹிட் அடித்த பாடிகார்ட் மற்றும் சிங்கம் ஆகியவற்றிற்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதோடு பல இசை வீடியோக்களிலும் தோன்றியுள்ளார்.
ganesh acharya
இவரது குண்டான தோற்றத்திற்கும் நடன அசைவிற்கும் எந்த சம்மந்தமும் இருக்காது.. அவ்வாறு தனி திறமைகளால் ரசிகர்ளை கவர்ந்தவர் கணேஷ் ஆச்சார்யா.
ganesh acharya
சிறந்த நடன அமைப்பிற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்தின் "மல்ஹாரி" பாடலுக்காக சிறந்த நடன அமைப்பாளர் என்னும் விருதுக்கு 61வது ஃபிலிம்பேர் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டார்.
ganesh acharya
இவர் நடன இயக்குனரும் நடிகருமான பிரபு தேவாவுடன் ஆடலாம் பாய்ஸ் சின்ன டான்ஸ் என்னும் படத்தில் நடனமாடி அஸ்தியிருந்தார். அதோடு தமிழில் விஜயின் சர்க்கார் படம் உள்ளிட்ட பல படங்களுக்கு கோரியோகிராபி செய்துள்ளார்.
ganesh acharya
தற்போது இவர் மீது பாலியல் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. அதாவது உடன் பணிபுரியும் இளம் பெண் ஒருவரை துன்புறுத்தியதாகவும் பாலியல் தொல்லை செய்வதாகவும் கணேஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ganesh acharya
அவரது நடனக்குழுவில் பணிபுரிந்து வந்த 35 வயது நடன நடிகை மும்பை போலீஸ் நிலையத்திலும் மற்றும் பெண்கள் கமிஷனிலும் புகார் கொடுத்தார். அடிப்படையில் கணேஷ் 8 பிரிவுகளின் கீழ் போலீசார்வழக்குப்பதிவு செய்தனர்.
ganesh acharya
அதோடு இவருக்கு உடந்தையாக புகார் அளித்த பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக ஜெயஸ்ரீ கேல்கர், பிரீத்தி லாட் ஆகிய இரண்டு பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ganesh acharya
ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டை கணேஷ் ஆச்சார்யா திட்டவட்டமாக மறுத்ததோடு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறிவந்தார். இந்நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இது குறித்து எந்த தகவலையும் பகிர கணேஷ் முத்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.