அப்பாடா ஒரு வழியா டைவர்ஸ் கிடைச்சிருச்சு; மனைவியை பிரிந்த சந்தோஷத்தில் பிரபல சீரியல் நடிகர்
Serial Actor Ishwar Divorce : சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ஈஸ்வர், தன் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
Serial Actor Ishwar
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வர். இவருக்கும் சின்னத்திரை சீரியல் நடிகை ஜெயஸ்ரீக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு ரேவதி என்கிற பெண் குழந்தையும் உள்ளது. அவரும் சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். திருமணமான சில ஆண்டுகளிலேயே ஜெயஸ்ரீக்கும் ஈஸ்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அப்போது ஈஸ்வர்ய் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ishwar, Mahalakshmi
ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதை தட்டிக்கேட்ட தன்னை ஈஸ்வர் அடித்ததாகவும் ஜெயஸ்ரீ புகார் அளித்ததை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்வர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமினில் வெளிவந்த அவர், மகாலட்சுமி தன்னுடைய தோழி என்றும், தங்களை தொடர்பு படுத்தி ஜெயஸ்ரீ பேசுவது துளியும் உண்மையில்லை எனவும் தன்மீதான குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார். அதுமட்டுமின்றி ஜெயஸ்ரீயை விவாகரத்து செய்து பிரிய சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.
இதையும் படியுங்கள்... மகாலட்சுமியுடன் மட்டும் இல்லை... இன்னும் இரண்டு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த ஈஸ்வர்..! வயிற்றில் உதைத்ததால் சந்திக்கு வந்த பிரச்சனை..! பகீர் கிளப்பும் மனைவி..!
Ishwar Divorce
கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் விவாகரத்து வழக்கு இழுபறியை சந்தித்து வந்தது. இடையே கொரோனா ஊரடங்கு வந்ததால் விவாகரத்து வழக்கு கிடப்பில் கிடந்த நிலையில், சுமார் 5 வருட போராட்டத்துக்கு பின்னர் தனக்கும் ஜெயஸ்ரீக்கும் விவாகரத்து கிடைத்துவிட்டதாக நடிகர் ஈஸ்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மனைவியை பிரிந்த சந்தோஷத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சோதனையான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Ishwar, Jayashree
மேலும் ஜெயஸ்ரீக்கும் தனக்கும் இடையேயான செட்டில்மெண்ட் எல்லாம் முடிவடைந்துவிட்டதாகவும், இனி என் விருப்பப்படி வாழ்க்கையை வாழ உள்ளேன். நடிப்பில் தான் நான் கவனம் செலுத்த போகிறேன். இந்த சவாலான காலகட்டத்தில் எனக்கு பக்கபலமாக இருந்த கடவுளுக்கு நன்றி. இந்த விவாகரத்து தொடர்பாக எந்த ஒரு பேட்டியும் அளிக்க மாட்டேன். எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள் என்று பதிவிட்டுள்ளார் ஈஸ்வர். இருப்பினும் விவாகரத்து பற்றி ஜெயஸ்ரீ இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மகாலட்சுமியுடன் என்ன தொடர்பு..! நெருக்கமாக இருக்கும் புகைப்படம் பற்றிய உண்மையை போட்டுடைத்த ஈஸ்வர்..!