சின்னத்திரை சீரியல் நடிகர் ஈஸ்வர், மனைவி ஜெயஸ்ரீ தன் மீது சுமற்றிய அடுக்கடுக்கான பல்வேறு புகார்களுக்கு, ஜெயிலில் இருந்து பெயிலில் வந்த கையோடு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

ஜெயஸ்ரீ, தன்னிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் இப்படி செயல் படுவதாகவும், உண்மையில் அவர் குழந்தையின் நலன் குறித்து யோசித்திருந்தால், குழந்தையை பக்கத்தில் வைத்துகொண்டு அவளின் வருங்காலம் பற்றி சற்றும் யோசிக்காமல் பேட்டி கொடுத்திருக்க மாட்டார் என்றும், அவதூறான விஷயங்களை பேசி இருக்க மாட்டார் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் ஈஸ்வருக்கு தவறான தொடர்பு இருப்பதாக ஜெயஸ்ரீ கூறிய புகாருக்கு விளக்கம் கொடுத்து ஈஸ்வர், தங்களுக்குள் அப்படி எந்த ஒரு தவறான உறவும் இல்லை என்றும், வெளிநாட்டில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம் என்றும் அதனை வைத்து ஜெயஸ்ரீ தன்னை மிரட்டி வருவதாக கூறியுள்ளார்.

அதே போல், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக உடன் நடித்த நடிகை மற்றும் ஏர் ஹோஸ்டர்ஸ் ஒருவருடன் பழக்கம் இருந்ததாக ஜெயஸ்ரீ கூறியதற்கு, இதுவரை யாருடனும் நான் எந்த ஒரு தவறான உறவில் இல்லை என்றும், அதனை நிரூபிப்பதற்கு எங்கு வேண்டும் என்றாலும் வர தயார் என சவால் விடுவது போல் பேசியுள்ளார் ஈஸ்வர்.

இருதரப்பினரும் இதுவரை ஒருவர் மீது ஒருவர், பழி சொல்லிகொண்டேயா இருப்பதால், யார் பக்கத்தில் உண்மை உள்ளது என்பது விரைவில் தெரியவரும்.