சின்னத்திரை சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும், சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து, ஈஸ்வரின் மனைவி, வெளிப்படுத்தியுள்ள விஷயம் காட்டு தீ போல் பற்றி எரிந்து வருகிறது.

மேலும் இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு நடிகை ஜெயஸ்ரீ கொடுத்த பேட்டியில், பல பகீர் தகவலை வெளியிட்டு அதிரவைத்துள்ளார்.

குறிப்பாக, வடபழனி போலீஸ் நிலையத்தில் நடிகை ஜெயஸ்ரீ தான் புகார் கொடுத்தார் என கூறப்பட்டு வந்த நிலையில், அதனை முற்றிலும் மறுத்துள்ளார். இந்த புகாரை தான் கொடுக்கவில்லை என்றும், ஈஸ்வர் தன்னுடைய அடிவயிற்றில் எட்டி உடைத்ததன், காரணமாக ஏற்பட்ட வலிக்காக மயக்க நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவமனை சார்பாக இந்த புகாரை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் ஈஸ்வருக்கு, மகாலட்சுமிக்கு முன்னரே , அவருடன் நடித்த மற்றொரு நடிகை மற்றும், ஏர் ஹோஸ்டர் என இருவருடன் தொடர்பு இருந்ததாகவும் கூறி அதிரவைத்துள்ளார்.

அதே போல், தன்னை பற்றி தவறாக மற்றவர்களிடம் பேசி வருவதாகவும், தனக்கு மற்றொருவருடன் தவறான உறவு உள்ளதாக கூறி தன்னிடம் இருந்து விவாகரத்து கேட்டு பல முறை அடித்துள்ளார் ஆனால் அது அனைத்தையும் தாங்கி கொண்டு, நான் ஒரு முறை கூட போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்தது கூட இல்லை.

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என, தன்னுடைய ஒட்டு மொத்த கேரியரையே... ஈஸ்வர் குடும்பத்தினர் பாழ் படுத்திவிட்டதாக கூறும் ஜெயஸ்ரீ, தன்னால் தன்னுடைய மகள் மீது அவர் கை வைத்ததை மட்டும் சகித்து கொள்ள முடியாது என தீர்க்கமாக பேசுகிறார். மேலும் தன்னிடம் இருந்து நகை, பணம் பெற்றுக்கொண்டது, சூதாட்டம் என அடுக்கடுக்காக பல்வேறு குற்றங்களை ஈஸ்வர் மீது அடுக்குகிறார் அவருடைய மனைவி ஜெயஸ்ரீ.