ரசிகர்களின் பேவரைட் சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டு வரும் விஜய் டிவி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த புத்தம் புது சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டுவர உள்ளனர். அதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கும் அண்மையில் நடைபெற்றுள்ளது.

Vijay TV serial End Soon : சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியலில் கொடிகட்டிப்பறப்பது விஜய் டிவி தான். டிஆர்பி ரேஸிலும் சன் டிவி சீரியல்களுக்கு விஜய் டிவி சீரியல்கள் செம டஃப் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் ஒன்று தற்போது முடிக்கப்பட உள்ளதாம். அந்த சீரியலின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாம். விரைவில் அந்த சீரியல் முடிவடைய உள்ள தகவல் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பாதியில் முடிக்கப்படும் விஜய் டிவி சீரியல்
அது வேறெதுவுமில்லை; விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘நீ நான் காதல்’ சீரியல் தான். இந்த சீரியலில் பிரேம் ஜேக்கப் ஹீரோவாக நடித்து வந்தார். மலையாள சீரியல் நடிகரான இவர் தமிழில் நடித்த முதல் சீரியல் இதுவாகும். இவரது மனைவி ஸ்வாசிகாவும் ஒரு நடிகை தான். அவர் சீரியலில் நடித்துள்ளதோடு அண்மையில் தமிழில் வெளிவந்த லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷ் ஜோடியாக யசோதா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... Pandian Stores: உண்மையை உடைத்த மீனா; ஆத்திரத்தில் அறைந்த பழனி! சுகன்யாவின் நாடகம் அரங்கேற்றம்!
நீ நான் காதல் சீரியல் ஏன் நிறுத்தப்படுகிறது?
பிரேம் ஜேக்கப் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த நீ நான் காதல் தொடரில் வர்ஷினி சுரேஷ், நவீன் முரளீதரன், சங்கரேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். 350 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது திடீரென முடிக்கப்படுவதால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். மொக்க சீரியல்களையெல்லாம் ஓட்டுகிறார்கள் இந்த நல்ல சீரியலை ஏன் நிறுத்துகிறார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தி சீரியலின் ரீமேக்
நீ நான் காதல் சீரியல் இந்தியில் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பான ‘நுவ்வு நேனு பிரேமா’ என்கிற தொடரின் தமிழ் ரீமேக் ஆகும். இந்தியில் சூப்பர் ஹிட் ஆனதால் இதனை தமிழில் ரீமேக் செய்து எடுத்தனர். ஆனால் அதை தற்போது பாதியிலேயே முடிவுக்கு கொண்டுவர உள்ளனர். விரைவில் நீ நான் காதல் சீரியலின் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. அந்த சீரியலுக்கு பதில் வேறு ஒரு புது சீரியல் வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது என்ன சீரியல் என்பதை விரைவில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... இது அதுல்ல; ஜீ தமிழ் சீரியலை அட்ட காப்பி அடித்த விஜய் டிவி - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!