- Home
- Cinema
- 'ஒரு மகள் தாய் வீட்டிற்கு வந்த உணர்வு'! திருமணத்திற்கு பின் சென்னை வந்த ஹன்சிகாவுக்கு நெகிழ்ச்சி!
'ஒரு மகள் தாய் வீட்டிற்கு வந்த உணர்வு'! திருமணத்திற்கு பின் சென்னை வந்த ஹன்சிகாவுக்கு நெகிழ்ச்சி!
நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பின்னர், முதல் முறையாக சென்னைக்கு வந்த போது... விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள்கொடுத்த வரவேற்பை கண்டு 'ஒரு மகள் தாய் வீட்டிற்கு வந்த உணர்வு ஏற்படுகிறது' என உணர்வுபூர்வமாக பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவருடைய நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான சோஹேல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர் சம்மதத்துடன் நடந்த, நடிகை ஹன்சிகா மற்றும் சோஹேல் கதூரியா திருமணம், ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த அரண்மனையில் மிகப் பிரமாண்டமாக நடந்தது.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரையுலகில் கவனம் செலுத்தி வந்த ஹன்சிகா, அவ்வப்போது கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர், முதல் முறையாக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த ஹன்சிகாவுக்கு, விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஹன்சிகா செய்தியாளர்களிடம் பேசிய போது, 'ஒரு மகள் தாய் வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சியோடு பேசினார்.
நடிகை சவுந்தர்யாவின் மறுபிறவியோ... அச்சு அசல் அவரை போலவே இருக்கும் பெண்ணின் புகைப்படங்கள் வைரல்!
மேலும் நந்த கோபால் இயக்கும், படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். ஒரு மாதம் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்று தெரிவித்த ஹன்சிகா, இந்த வருடம் மட்டும் தன்னுடைய ஏழு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாகவும், திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இன்றைய கால கட்டத்தில் அனைவரும் சமம். கல்யாண வாழ்க்கைக்கு பிறகு, கையில் உள்ள மோதிரம் தான் மாறி உள்ளது என தெரிவித்துள்ளார். ஹன்சிகாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹன்சிகாவின் திருமண வீடியோ ஒளிபரப்பும் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இவரின் திருமண டீசர் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.