மாசம் 1 லட்சத்துக்கு ஆசை பட்டு... 50 லட்சத்தை கோட்டை விட்ட தமிழ் பட முன்னணி நடிகை!
பிரபல நடிகை, ஹோட்டலில் தொழிலதிபர் தன்னிடம் 50 லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டதாக கூறி, பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஆதியுடன் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்த போது, இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, அவ்வப்போது இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றியும் வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை நிக்கி கல்ராணி பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் ஸ்டேசனில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அதில், ‘‘கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் நிகில், இவருடைய ஓட்டலில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.50 லட்சம் முதலீடு செய்ய கூறியதாகவும், இதற்காக மாதம் ரூ.1 லட்சம் கொடுப்பதாக நிகில் கொடுப்பதாகவும் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இதுவரை நிகில் எனக்கு மாதம் ரூ.1 லட்சம் கொடுக்கவில்லை என்றும், தன்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பலமுறை நிகிலிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை எனவே, தன்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் நிகில் மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் நடிகை ஒருவர் மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு ஆசை பட்டு, 50 லட்ச ரூபாயை இழந்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.