K.J. Yesudas Hospitalized: பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!
50 வருடங்களுக்கு மேலாக, தன்னுடைய இனிமையான குரலால் ஏராளமான பாடல்களை பாடி பிரபலமான கே.ஜே.யேசுதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

50-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடலை பாடியுள்ளார்:
கேரள மாநிலத்தை சேர்ந்த கே.ஜே.யேசுதாஸ் தன்னுடைய தனித்துவமான குரல் வளத்தால் உலக அளவில் பிரபலமானவர். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
அப்பாவால் இசை மீது ஏற்பட்ட ஆர்வம்:
இவருடைய தந்தை ஒரு இசைக் கலைஞர் என்பதால், சிறு வயதிலேயே கே.ஜே.யேசுதாசுக்கும் இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. இதன் பின்னர், இந்துஸ்தானி இசையிலும் கை தேர்ந்தவராக மாறினார். 1962 ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான 'கால்பாடுகள்' என்கிற திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார் யேசுதாஸ்.
85-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மாயக்குரல் மன்னன்; கே.ஜே.யேசுதாஸின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
தமிழில் இவர் பாடிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது:
முதல் படத்திலேயே இவர் பாடிய பாடல், மற்றும் இவரின் குரல் வலம் ரசிகர்களை வசீகரித்த நிலையில்... அடுத்தடுத்து பல மலையாள திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தமிழில் கே ஜே யேசுதாஸ் 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்கிற படத்தில் பாடியிருந்தார். ஆனால் இந்த பாடல் வெளியாவதற்கு முன்னரே, 'கொஞ்சம் குமரி' படத்தில் இவர் பாடிய பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
700-க்கும் மேற்பட்ட பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார்
தமிழில் மட்டும் சுமார் 700-க்கும் மேற்பட்ட பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கமல், அஜித், விஜய், என சுமார் 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் பாடியுள்ளார் கே ஜே யேசுதாஸ். இவரை தொடர்ந்து இவரின், மகன் விஜய் யேசுதாசும் முன்னணி பாடகராக உள்ளார். தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார்.
கே ஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் இவரை பற்றி வெளியாகியுள்ளதகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது 85 வயதாகும் இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, கே ஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் யேசுதாஸ் கூடிய விரைவில் நலம் பெற வேண்டும் என தங்களுடைய, பிராத்தனைகள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.