85-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மாயக்குரல் மன்னன்; கே.ஜே.யேசுதாஸின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
இசை ரசிகர்களை, கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மாயக்குரலால் மயக்கி வரும், பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் இன்று தனது 85-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
KJ Yesudas Family
சுமார் 50 வருட வருடங்களுக்கு மேலாக, இசை ரசிகர்களை தன்னுடைய இனிமையான குரலால் கவர்ந்து வரும், கே.ஜே.யேசுதாஸ் சுமார் 50,000-திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் பாடியுள்ள இவர், கேரள மாநிலம், கொச்சியில் லத்தின் கத்தோலிக்க கிறிஸ்த்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை பெயர் அகஸ்டின் ஜோசப்.. தாயார் எலிசபெத்.
KJ Yesudas Father is Singer
கே.ஜே.யேசுதாஸுக்கு இசை மீது ஆர்வம் வர முக்கிய காரணம் அவரது தந்தை தான். காரணம் கே.ஜே.யேசுதாஸ் தந்தை ஒரு இசைக்கலைஞர் என்பதால், ஆரம்ப காலத்தில் தன்னுடைய தந்தையிடமே இசை பயிற்சி மேகொண்டார். பின்னர் திருப்புனித்துறையில் இருந்த ஒரு இசை அகாடமியில் தன் இசைக் கல்வியை தொடர்ந்தார். இந்துஸ்தானி இசையில் கைதேர்த்தவராக மாறிய யேசுதாஸ் பின்னர் திரைப்படங்களில் பாடல்கள் பாட வாய்ப்பு தேட துவங்கினார்.
பாடகர் ஜெயச்சந்திரன் யார்? இந்த சூப்பர் ஹிட் பாடல்கள் எல்லாம் இவர் பாடியதா!
KJ Yesudas First tamil movie Song
அதன்படி, கே.ஜே.யேசுதாஸ் 1962-ல் வெளியான மலையாள படமான 'கால்பாடுகல்' என்கிற திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான மலையாள படங்களில், முன்னணி நடிகர்களுக்கு பாடினார். இவர் பாடிய பாடல்கள், மலையாள திரையுலக ரசிகர்களை தொடர்ந்து, தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களையும் கவனிக்க வைத்தது. பின்னர், தமிழில் இயக்குனர் எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'பொம்மை' என்கிற திரைப்படத்தில் இவர் பாடிய நீயும் பொம்மை நானும் பொம்மை என்கிற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
KJ Yesudas sang more than 700 songs
தமிழில் யேசுதாஸ் பாடிய முதல் பாடல் இது என்றாலும், முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. தமிழில் மட்டும் சுமார் 700-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக 'அதிசய ராகம், மலரே குறிஞ்சி மலரே, கண்ணன் ஒரு கை குழந்தை, மனைவி அமைவதெல்லாம், உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்த பாடல்கள் ஆகும். எம்.ஜி .ஆர், சிவாஜி கணேசன் துவங்கி, ரஜினி - கமல், விஜய் - அஜித் மற்றும் இன்றைய 2கே கிட்ஸ் குழந்தைகளுக்கும் பல பாடல்கள் பாடியுள்ளார்.
அஜித்தின் ரேஸ் கார் பலத்த சேதமடைந்தும் ஒரு காயம் கூட இல்லாமல் அவர் தப்பியது எப்படி?
Vijay Yesudas Also Singer
மலையாள மொழியில் துவங்கி, தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தின், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். இவரை தொடர்ந்து இவரின் மகன் விஜய் யேசுதாசும் ஒரு பின்னணி பாடகராகவும், நடிகராகவும் கலக்கி வருகிறார்.
KJ Yesudas 85th Birthday
இன்று தன்னுடைய 85-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் கே.ஜே.யேசுதாஸின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 50 வருடங்களுக்கு மேல் தன்னுடைய மாயக்குரலால் ரசிகர்கள் மனதில் ராஜ்ஜியம் செய்து வரும் இவருக்கு, கேரளாவில் மட்டும் இன்றி, சென்னை, ஹைதராபாத் போன்ற வற்றிலும் சொந்த வீடு உள்ளது. ஆனால் கேரளாவில் மட்டும் தான் இவர் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கிறார். சில சொகுசு கார்களை வைத்திருக்கும், யேசுதாஸ் என்றும் ஆடம்பரத்தை விரும்பாதவர். குடும்பத்துடன் இருப்பது மட்டுமே தனக்கு அதிக மகிழ்ச்சியை தரும் என கூறியுள்ளார்.
KJ Yesudas Awards
சமீப காலமாக திரைப்பட பாடல்கள் பாடுவதை குறைத்து கொண்டாலும்.. மேடை நிகழ்ச்சிகளில் தன்னுடைய ரசிகர்களுக்காக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியுள்ள யேசுதாஸ் 8 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்று சாதனை படைத்துள்ளார். அதே போல், மாநில அளவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து 45 முறை சிறந்த பாடகருக்கான விருதை பெற்ற ஒரே பாடகர் என்கிற பெருமைக்குரியவர் கே.ஜே.ஏசுதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.