இன்று என் பிறந்தநாள் இல்லை... இறந்த நாள்... அதிர்ச்சி பதிவு போட்ட பிரபல இயக்குனர்!
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பதிவுகளை தட்டி விட்டு, வம்பை கூட விலை கொடுத்து வாங்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, தன்னுடைய பிறந்தநாள் அன்று, பிறந்த நாள் இல்லை என்னுடைய இறந்தநாள் என கூறி அதிர்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா. பிரபலங்கள் குறித்து டுவிட்டரில் கருத்து சொல்லி, சர்ச்சையில் சிக்கிக் கொள்வது மட்டுமில்லாமல், அவர் இயங்கும் படங்களும் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம்.
இவர் இந்தியில் இயக்கிய ரங்கீலா, தெலுங்கில் லட்சுமி என்.டி.ஆர் ஆகிய படங்கள் மிகப்பெரும் பிரச்சனைகளை கிளப்பின.
ஆந்திராவின் முதல்வராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை குறித்து "கம்மா ராஜ்யம்லோ கடப்பா ரெட்லு" என்ற பெயரில் ராம்கோபால் வர்மா எடுத்த படம், ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது.
மேலும் ஓடிடி தளத்தில், லெஸ்பியன், மற்றும் மோசமான கவர்ச்சியில் சில புகைப்படங்களை இயக்கி வெளியிட்டார். இந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு மகிழ்ச்சியாக ஏதேனும் சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று என் பிறந்தநாள் இல்லை இறந்தநாள் என கூறியுள்ளார்.
தன்னுடைய வாழ்நாளில் ஒருவருடத்தை இழந்து விட்டேன் என்பதாலேயே இது போல் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.