ஃபெராரி நிறுவனத்தின் முதல் SUV கார்; ரூ.13.75 கோடிக்கு கார் வாங்கிய ஃபகத் பாசில்!
Fahadh Faasil Buys New Ferrari Purosangue SUV Car : ஃபஹத் ஃபாசில் புதிய ஃபெராரி புரோசாங்க்யூ SUV காரை வாங்கியுள்ளார். ஏற்கனவே பல சொகுசு கார்களை வைத்திருக்கும் இவர், புதியதாக ஒரு ஃபெராரி காரை வாங்கியுள்ளார். காரின் விலை, சிறப்பம்சங்கள் என்ன?
14

Image Credit : Saregama Tamil/ Youtube
ஃபெராரி நிறுவனத்தின் முதல் SUV கார்; ரூ.13.75 கோடிக்கு கார் வாங்கிய ஃபகத் பாசில்!
ஃபஹத் ஃபாசில்: புகழ்பெற்ற நடிகரான ஃபஹத் ஃபாசில், மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற இவர், தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
24
Image Credit : https://www.instagram.com/automobiliardent/
ஃபஹத் ஃபாசில் புதிய ஃபெராரி புரோசாங்க்யூ
ஃபஹத் ஃபாசில் புதிய ஃபெராரி புரோசாங்க்யூ SUV காரை வாங்கியுள்ளார். இந்தக் காரின் விலை சுமார் ரூ.13.75 கோடி. ஃபெராரி நிறுவனத்தின் முதல் SUV காரான இது, பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. விக்ரம், முகேஷ் அம்பானி போன்றோரும் இந்தக் காரை வைத்துள்ளனர்.
34
Image Credit : https://www.instagram.com/automobiliardent/
ஃபெராரி புரோசாங்க்யூ,
ஃபெராரி புரோசாங்க்யூ, ஃபெராரி நிறுவனத்தின் முதல் SUV கார். 6.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 725bhp பவர், 716 Nm டார்க், 3.3 வினாடிகளில் 0-100 kmph வேகம், 310 kmph அதிகபட்ச வேகம் என பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.
44
Image Credit : X
லம்போர்கினி உருஸ், மெர்சிடிஸ் G63 AMG,
ஃபஹத் ஏற்கனவே லம்போர்கினி உருஸ், மெர்சிடிஸ் G63 AMG, ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், போர்ஷே, டொயோட்டா போன்ற பல சொகுசு கார்களை வைத்துள்ளார். ஃபஹத் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஒடும் குதிர சாதும் குதிர' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை அல்தாஃப் சலீம் இயக்கியுள்ளார்.
Latest Videos