- Home
- Cinema
- இசைக்குயிலுக்கு இன்று பிறந்தநாள்... பாடகி பி.சுசிலா பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ
இசைக்குயிலுக்கு இன்று பிறந்தநாள்... பாடகி பி.சுசிலா பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் பாடகி பி.சுசிலா. இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடும் பாடகி பி.சுசிலாவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாடகி பி.சுசிலாவின் தந்தை பெயர் புலப்பக முகுந்த ராவ், தாயார் பெயர் ஷேஷவதரம். 1957-ம் ஆண்டு மோகன் ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட பி.சுசிலாவின் திருமண வாழ்க்கை கடந்த 1947-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இவரது கணவர் மோகன் ராவ் கடந்த 1990-ம் ஆண்டு மரணமடைந்தார். கடந்த 1951-ம் ஆண்டு தொடங்கிய பாடகி பி.சுசிலாவின் இசை சேவை இன்று வரை தொடர்ந்து வருகிறது.
இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் சுசிலா. இவருக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறார். அவரது பெயர் ஜெயக்கிருஷ்ணா, இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். முறையாக இசைப்பயிற்சி பெற்று சினிமாவில் பாடகியான பி.சுசிலா, தமிழில் முதன்முதலில் பாடிய பாடல் கடந்த 1953-ம் ஆண்டு வெளியானது.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சந்திராணி படத்தில் இடம்பெற்ற அன்பாய் தேசமெங்கும் ஒன்றாய் கூடி என்கிற பாடல் தான் தமிழில் இவர் பாடிய முதல் பாடலாகும். இந்திய திரையிசையில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலம் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார் பி.சுசிலா. இவர் பாடிய பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்... திருமணத்திற்காக நயன்தாரா செஞ்ச விஷயத்தை அப்படியே காப்பி அடிக்கும் ஹன்சிகா... என்ன பண்ணபோகிறார் தெரியுமா?
கடந்த 2008-ம் ஆண்டு தன் பெயரில் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்த பி.சுசிலா, அதன்மூலம் நலிவுற்ற இசைக்கலைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கி வருகிறார். அந்த டிரஸ்ட் சார்பில் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார் பி.சுசிலா. அதில் இரண்டு விருது உயர்ந்த மனிதன் மற்றும் சவாலே சமாளி ஆகிய படங்களுக்காக இவர் வாங்கியதாகும். இதுதவிர பத்மபூஷன் விருது, கலைமாமணி விருது என எக்கச்சக்கமான விருதுகளை வாங்கியுள்ளார் சுசிலா.
இசைக்குயில், இசையரசி, கான கோகி்லா, கான குயில், கான சரஸ்வதி, மெல்லிசை அரசி என இவருக்கு பல்வேறு பட்டங்கள் இருக்கின்றன. இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் துலு, படுகா, சிங்களம், ஒரியா, பஞ்சாபி போன்ற மொழிகளிலும் பல்வேறு பாடல்களை பாடி உள்ளார் பி.சுசிலா. அதிக பாடல்களை பாடிய பாடகி என்கிற சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அய்யோ இவங்களா! பிக்பாஸ் 6ல் வைல்டு கார்டு எண்ட்ரிக்கு தயாராகும் பிரபல விஜே- அப்போ இனி சண்டைக்கு பஞ்சமிருக்காது