- Home
- Cinema
- அதிகாலையிலேயே சென்னையில் துல்கர் சல்மான் வீட்டை சுற்றிவளைத்த அமலாக்கத்துறை.!இது தான் காரணமா.?
அதிகாலையிலேயே சென்னையில் துல்கர் சல்மான் வீட்டை சுற்றிவளைத்த அமலாக்கத்துறை.!இது தான் காரணமா.?
Actor Dulquer Salmaan : சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் நடிகர் துல்கர் சல்மானின் கேரள வீட்டில் சுங்கத்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது அவரது சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரபல நடிகர் துல்கர் சல்மான், இவர் மலையாலம், தமிழ் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 23, 2025 அன்று, "ஆபரேஷன் நும்கோர்" என்ற பெயரில் கேரளாவின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் துல்கர் சல்மானின் கேரளாவில் உள்ள கொச்சி வீடு மற்றும் பிரித்விராஜ் சுகுமாரனின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையானது பூட்டானில் இருந்து வரி செலுத்தாமல் சொகுசு கார்கள் வாங்கப்பட்டதையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையடுத்து துல்கரின் வீட்டில் இருந்து இரண்டு சொகுசு கார்கள் லேண்ட் க்ரூசர் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துல்கர் சல்மான், செப்டம்பர் 26ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தில் கார் பறிமுதலுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கார் இந்திய சிவசேவை சங்கத்திடமிருந்து வாங்கியதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 8, 2025) காலை முதல், துல்கர் சல்மானின் சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே கார் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறை சொகுசு கார் வாங்கியது தொடர்பாக கேரளாவில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.