லைகர் பட பஞ்சாயத்து... 12 நேரம் துருவி துருவி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை... நொந்துபோன விஜய் தேவரகொண்டா
பிரபலமாக இருந்தால் சில தொல்லைகள் மற்றும் பிரச்சனைகள் வருவது இயல்பு தான் என 12 நேர அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டு வெளியாகி படுதோல்வியை சந்தித்த பான் இந்தியா படங்களில் லைகர் திரைப்படமும் ஒன்று. விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்த இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கி இருந்தார். அவருடன் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சார்மி, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தனர். விஜய் தேவரகொண்டாவும் இதில் முதலீடு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
லைகர் படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து தற்போது அப்படத்தின் முதலீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அப்படத்தில் வெளிநாட்டு ஹவாலா பணமும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. முதலில் சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் ஜிபி முத்துவை சரமாரியாக பிளேடில் வெட்டிய சகோதரர்! 175 தையல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதையடுத்து இப்படத்தில் முதலீடு செய்திருந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். இதை ஏற்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் அதிகாரிகள் 12 மணிநேரம் துருவி துருவி விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணைக்கு பின் நொந்துபோன விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது : “பிரபலமாக இருந்தால் சில தொல்லைகள் மற்றும் பிரச்சனைகள் வருவது இயல்பு தான். என்னைப் பொறுத்தவரை இது ஒரு அனுபவமாக பார்க்கிறேன். விசாரணைக்கு அழைத்ததால் நான் எனது கடமையை செய்தேன். அதிகாரிகளின் கேள்விகளுக்கும் உரிய பதிலை கொடுத்தேன். திரும்பவும் என்னை விசாரணைக்கு கூப்பிட மாட்டார்கள் என நம்புகிறேன்” என கூறினார்.
இதையும் படியுங்கள்... ரக்ஷிதாவுக்கும் எனக்கும் என்ன உறவு? உண்மையை வெளிப்படையாக போட்டு உடைத்த ராபர்ட் மாஸ்டர்!!