MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வார நாட்களிலும் வசூலை வாரிக் குவிக்கும் ‘சீதா ராமம்’ அடேங்கப்பா 5 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா..!

வார நாட்களிலும் வசூலை வாரிக் குவிக்கும் ‘சீதா ராமம்’ அடேங்கப்பா 5 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா..!

Sita Ramam Boxoffice collection : ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா, மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சீதா ராமம் படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 10 2022, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமான படம் சீதா ராமம். ஹனு ராகவபுடி இயக்கியிருந்த இப்படத்தில் நாயகிகளாக மிருணாள் தாக்கூரும், ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்த இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி வெளியிடப்பட்டது.

24

தமிழகத்தில் இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது. அன்றைய தினம் அதர்வாவின் குருதி ஆட்டம், ஜெய் நடித்த எண்ணித் துணிக, வைபவ்வின் காட்டேரி, பிரபுதேவா நடித்த பொய்க்கால் குதிரை போன்ற படங்களும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆனதால், துல்கர் சல்மானின் சீதா ராமம் படத்துக்கு குறைந்த அளவிலான தியேட்டர்களே ஒதுக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்... சமந்தாவை விட்டு பிரிந்தாலும்... அவருக்காக போட்ட டாட்டூவை அழிக்காதது ஏன்? - நாக சைதன்யா சொன்ன சீக்ரெட்

34

சீதா ராமம் படத்துக்கு போட்டியாக ரிலீஸான அனைத்து தமிழ் படங்களும் சொதப்பியதால், தற்போது தமிழ் நாட்டில் சீதா ராமம் படத்துக்கான தியேட்டர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு காரணம் இப்படத்திற்கு கிடைத்து வரும் பாசிடிவ் விமர்சனங்கள் தான். இதனால் இப்படத்தின் வசூலும் அதிகரித்து உள்ளது.

44

அதன்படி சீதா ராமம் திரைப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.28 கோடி வசூலித்துள்ளதாம். வார நாட்களிலும் இப்படத்திற்கு அதிகளவில் கூட்டம் வருவதால், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெளியாக உள்ளதால் அங்கும் வசூல் சாதனை புரியும் என கூறப்படுகிறது. ஏனெனில் துல்கர் நடிப்பில் இதற்கு முன் வெளியான குரூப் படம் அங்கு மட்டும் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சூர்யா - ஜோதிகா இடையே சண்டையா?.. திடீரென ‘ஜோ’ பெயரை நீக்கி அதிர்ச்சி கொடுத்த தேசிய விருது நாயகன்- என்ன காரணம்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஷ்மிகா மந்தனா

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved