MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒதுங்கிய டாப் ஹீரோக்கள்... களமிறங்கிய இளம் படை - இந்த வருட தீபாவளிக்கு பட்டாசாய் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

ஒதுங்கிய டாப் ஹீரோக்கள்... களமிறங்கிய இளம் படை - இந்த வருட தீபாவளிக்கு பட்டாசாய் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

தீபாவளி பண்டிகைக்கு புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம், அந்த வகையில் 2025-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 13 2025, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Diwali Release Tamil Movies
Image Credit : X

Diwali Release Tamil Movies

தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசும், புதுப் படமும் தான். வழக்கமாக தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களின் படங்கள் ஏதாவது ஒன்று ரிலீஸ் ஆகிவிடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய ஹீரோக்கள் தீபாவளி ரேஸில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த ஆண்டு இரண்டாம் நிலை ஹீரோக்கள் கூட தீபாவளி ரேஸில் இடம்பெறாதது ஆச்சர்யமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன், துருவ் விக்ரம், ஹரிஷ் கல்யாண் என இளம் ஹீரோக்கள் மட்டுமே களம் காணுகின்றனர். அதைப்பற்றி பார்க்கலாம்.

26
டியூட்
Image Credit : youtube

டியூட்

தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படமும் உள்ளது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் மமிதா பைஜு, பரிதாபங்கள் டிராவிட், சரத்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் மூலம் சாய் அபயங்கரும் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

Related Articles

Related image1
மாரி செல்வராஜ் படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? ரிலீஸுக்கு முன்பே கல்லாகட்டும் பைசன் காளமாடன்!
Related image2
அடுத்தவன் ஃபீலிங்ஸ கிரிஞ்சா பாக்குறது தான் இப்ப டிரெண்டே... டியூட் படத்தின் அதகளமான டிரெய்லர் இதோ
36
பைசன் காளமாடன்
Image Credit : Asianet News

பைசன் காளமாடன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள பைசன் காளமாடன் திரைப்படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து உள்ளார். இப்படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரனாக நடித்துள்ளார். ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படமும் அக்டோபர் 17ந் தேதி திரைக்கு வருகிறது.

46
டீசல்
Image Credit : Moviebuff

டீசல்

ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி உள்ள படம் டீசல். இப்படமும் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஷண்முகம் முத்துச்சாமி இயக்கி உள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தை தேர்டு ஐ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ரிச்சர்டு எம் நாதன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இப்படமும் அக்டோபர் 17ந் தேதியன்று ரிலீஸ் ஆகிறது.

56
கார்மேனி செல்வம்
Image Credit : Moviebuff

கார்மேனி செல்வம்

சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கார்மேனி செல்வம். இப்படத்தை ராம் சக்ரி இயக்கி உள்ளார். யுவராஜ் தக்‌ஷன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ளார். பணத்தின் மீது ஏற்படும் ஆசை ஒருவரின் வாழ்க்கையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம். இப்படமும் அக்டோபர் 17 அன்று திரை காண உள்ளது.

66
கம்பி கட்ன கதை
Image Credit : X

கம்பி கட்ன கதை

நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடித்துள்ள படம் கம்பி கட்ன கதை. இப்படத்தை ராஜநாதன் பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் மனோபாலா, சிங்கம்புலி, சீனிவாசன், முத்துராமன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சதுரங்க வேட்டை பாணியில் உருவாகி இருக்கும் இப்படம் அக்டோபர் 17ந் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
டைவர்ஸ் கொடுக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன்... ரோகிணி விரித்த வலையில் சிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Related Stories
Recommended image1
மாரி செல்வராஜ் படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? ரிலீஸுக்கு முன்பே கல்லாகட்டும் பைசன் காளமாடன்!
Recommended image2
அடுத்தவன் ஃபீலிங்ஸ கிரிஞ்சா பாக்குறது தான் இப்ப டிரெண்டே... டியூட் படத்தின் அதகளமான டிரெய்லர் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved