MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயனுக்கு திருமணம் ஆனதால்.. அடுத்த லேடிசூப்பர்ஸ்டார் ஆக பிளான் போடுகிறாரா ஐஸ்வர்யா ராஜேஷ்? அவரே சொன்ன நச் பதில்

நயனுக்கு திருமணம் ஆனதால்.. அடுத்த லேடிசூப்பர்ஸ்டார் ஆக பிளான் போடுகிறாரா ஐஸ்வர்யா ராஜேஷ்? அவரே சொன்ன நச் பதில்

நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆகும் நோக்கத்தில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறீர்களா என்கிற கேள்வி ஐஸ்வர்யா ராஜேஷிடம் முன்வைக்கப்பட்டது.

1 Min read
Author : Ganesh A
Published : Nov 01 2022, 08:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக நயன்தாராவுக்கு அடுத்தபடியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக நடிக்கும் நாயகி என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். தற்போது இவர் கைவசம் சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன் என ஏராளமான கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்கள் உள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை கிங்ஸ்லின் இயக்கி உள்ளார். இப்படத்தில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது.

இதையும் படியுங்கள்... ஒரிஜினல் கார் ஸ்டண்ட் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்..டூப் வேணான்னு சொல்லிட்டாங்களாம்!

34

அதில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக அவரிடம், “நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆகும் நோக்கத்தில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறீர்களா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.

44

இதற்கு பதிலளித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது : “இதென்ன வம்பா இருக்கு. நான் எதையும் பிளான் பண்ணி பண்ணல. எப்பவுமே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். ஹீரோ வேண்டாம்னு நான் முடிவு பண்ணி நடிக்கல. நல்ல கதை உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். இந்த மாதிரியான கதைகள் அமைவதால் தொடர்ந்து அவ்வாறு நடித்து வருகிறேன். லேடி சூப்பர்ஸ்டார் ஆகனும் என்கிற பிளானுடன் நான் அப்படி செய்யவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image2
Now Playing
Sunny Leone Net Worth | அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Now Playing
CM Vijay : நடிகராக 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்; முதல்வராக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved