ஒரே படத்தில் அஜித், விஜயை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்..என்ன விஷயம் தெரியுமா?
டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவதாக முறையாக சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் ஹிட் ஆகியிருப்பதாக அறிவித்துள்ளனர்.

don movie
நெல்சன் இயக்கத்தில் வெளியாகி ஹிட் கொடுத்து டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனரான சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் மே 13ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகியது. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார்.. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
don movie
கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து டாதயாரித்தன. மேலும், தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சிவாங்கி, மிர்ச்சி விஜய், முனீஸ்காந்த், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி பால சரவணன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
don movie
பாஸிட்டிவான விமர்சங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள டான் குறித்து சமீபத்தில், ஒரே பேட்டியில் ரஜினி படத்தை பார்த்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். அதோடு படம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ 66 கோடிகளையும், தமிழகத்தில் மட்டுமே 7 நாட்களில் ரூ. 46 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
don movie
இந்நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிளாக்பாஸ்டர் ஹிட் அடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய சிவகார்த்திகேயன் படமான டாக்டர் தெலுங்கு மொழியில் ஹிட் கொடுத்திருந்தது. இதற்கிடையே வெளியான பீஸ்ட், வலிமை உள்ளிட்ட படங்கள் தெலுங்கில் போதிய வரவேற்பு பெறவில்லை என்று கூறப்படுகிறது.