- Home
- Cinema
- ரெஜினாவின் ஐட்டம் சாங்கை பார்த்து கொந்தளித்த கொரோனா வாரியர்ஸ் (டாக்டர்கள்).... அப்படி அதுல என்னதான் இருக்கு?
ரெஜினாவின் ஐட்டம் சாங்கை பார்த்து கொந்தளித்த கொரோனா வாரியர்ஸ் (டாக்டர்கள்).... அப்படி அதுல என்னதான் இருக்கு?
ஆச்சார்யா (Acharya) படத்திற்காக ரெஜினா (Regina) ஆடிய ஐட்டம் சாங்கிற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இப்பாடலுக்கு ஆர்எம்பி டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றிக்கு சமந்தாவின் ஐட்டம் டான்ஸும் ஒரு முக்கிய காரணம். இந்த பாடல் வெளியானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.
ஏனெனில் அதன் லிரிக்ஸ் ஆண்களை இழிவு படுத்தும் விதமாக உள்ளதாக கூறி ஆண்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இப்பாடலுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பால் அதெல்லாம் தவிடுபொடி ஆனது.
புஷ்பா பட ஐட்டம் பாடல் ஹிட்டானதால், தற்போது அது ஒரு டிரெண்டாக மாறி உள்ளது. அதே பார்முலாவை, தற்போது சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி இருக்கும் ஆச்சார்யா படத்திலும் பின்பற்றி உள்ளனர்.
அதன்படி இப்படத்தில் சானா கஷ்டம் என்கிற ஐட்டம் பாடல் ஒன்று இடம்பெற்று உள்ளது. இப்பாடலுக்கு நடிகை ரெஜினா குத்தாட்டம் போட்டுள்ளார். சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியான உடையில் இவர் ஆடியுள்ள நடனம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ரெஜினா ஆடிய ஐட்டம் சாங்கிற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இப்பாடலுக்கு ஆர்எம்பி டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்தப்பாடல் வரிகளில் இன்றைய இளைஞர்கள் பலரும் ஆர்எம்பி டாக்டர் ஆக விரும்புவதாகவும், அதற்கு காரணம், அவர்களுக்குத்தான் அழகு சிகிச்சை என்ற பெயரில் சினிமா நடிகைகளின் உடலை தொட்டு மருத்துவம் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது போல வரிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வரிகள் தங்களை மோசமாக சித்தரிக்கும் படி உள்ளதாக ஆர்எம்பி டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ள அவர்கள், இப்பாடலை எழுதியதற்காக தங்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.