- Home
- Cinema
- Actor Ajith : விபத்தில் காயம்... பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டார் அஜித்! - டாக்டர் கூறிய பகீர் தகவல்
Actor Ajith : விபத்தில் காயம்... பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டார் அஜித்! - டாக்டர் கூறிய பகீர் தகவல்
Actor Ajith : நடிகர் அஜித்தின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரேஷ் பத்மநாபன், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பால் உயர்ந்தவர் அஜித்
தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. மீடியா வெளிச்சத்தை சுத்தமாக விரும்பாதவர் அஜித். பட விழாக்கள், புரமோஷன் நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்களில் கூட அவர் கலந்துகொள்ள மாட்டார். இருந்தாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் என்பது நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு தான் போகிறது.
வலிமை ரிலீஸ்
நடிகர் அஜித் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான படம் தான் வலிமை. எச்.வினோத் இயக்கியிருந்த இப்படத்தில் அஜித்துடன் கார்த்திகேயா, ஹூமா குரேஷி, ராஜு ஐயப்பா, சுமித்ரா நாயர், புகழ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.
ரூ.200 கோடி வசூல்
நடிகர் அஜித்தின் கெரியரில் முதன்முறையாக இது பான் இந்தியா படமாக வெளியானது. அதன்பலனாக இப்படம் 10 நாட்களில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. வலிமை படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது அப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தான். இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் மாஸ்டர் பணியாற்றி இருந்தார்.
அஜித் எடுத்த ரிஸ்க்
இப்படத்துக்காக நடிகர் அஜித் ரிஸ்க் எடுத்து பல்வேறு ஸ்டண்ட் காட்சிகளில் நடித்திருந்தார். குறிப்பாக பைக் சேஸிங் காட்சியில் நடித்தபோது நடிகர் அஜித் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதுகுறித்த பதைபதைக்கும் வீடியோ காட்சிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படக்குழு வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்து ரசிகர்கள் கண்கலங்கினர்.
அஜித்தின் உடல்நிலை
இந்நிலையில், நடிகர் அஜித்தின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரேஷ் பத்மநாபன், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : வலிமை பட ஷூட்டிங்கின் போது அஜித் விழுந்த ஒரு காட்சியை மட்டும் தான் மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அவர் நான்கைந்து முறை பைக்கில் ஸ்டண்ட் செய்யும் போது காயம் அடைந்துள்ளார்.
பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்
அஜித்தின் முதுகெலும்பில் இரண்டு நிலையிலான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தியதனால் கீழ் முதுகெலும்பில் இருந்து ஒரு எலும்பு மட்டும் அகற்றப்பட்டது. கீழ் முதுகில், அஜித்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, கிட்டத்தட்ட பக்கவாதத்தால் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Etharkkum Thunindhavan review : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பாஸா? பெயிலா? - முழு விமர்சனம் இதோ