- Home
- Cinema
- Priyanka Mohan Latest : மஞ்ச காட்டு மைனா போல்... பார்க்க பார்க்க திகட்டாத அழகில் இம்சிக்கும் பிரியங்கா மோகன்
Priyanka Mohan Latest : மஞ்ச காட்டு மைனா போல்... பார்க்க பார்க்க திகட்டாத அழகில் இம்சிக்கும் பிரியங்கா மோகன்
Priyanka Mohan Latest : நடிகர் சூர்யாவை வைத்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்திலும் ஹீரோயினாக நடித்து உள்ளார் பிரியங்கா மோகன். இப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் (Priyanka Mohan), நாளுக்கு நாள் அழகில் மெருகேறி வருவதுடன், மாடர்ன் லூக்கிற்கு மாறிவருகிறார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.
பின்னர் தமிழ் திரையுலகிலும் நுழைந்த பிரியங்கா மோகன் (Priyanka Mohan), கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி, பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படமான 'டாக்டர்' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நிலையில், அவர் அடுத்ததாக நடித்துள்ள ‘டான்’ படத்திலும் ஹீரோயின் சான்ஸை தட்டித்தூக்கினார் பிரியங்கா.
இதுதவிர நடிகர் சூர்யாவை வைத்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்திலும் ஹீரோயினாக நடித்து உள்ளார் பிரியங்கா மோகன் (Priyanka Mohan). இப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா மோகன் மஞ்சள் நிற உடையில் அழகு தேவை போல் காட்சியளித்தார். அந்நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Maamannan movie : உதயநிதியை ‘மாமன்னன்’ ஆக்கிய மாரி செல்வராஜ்.... நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக்