“காதலுக்கு மரியாதை” படத்தில் முதலில் விஜய்க்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?... கை நழுவிய வாய்ப்பு..!
காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் விஜய்க்கு பதிலாக நடிக்கவிருந்த சாக்லெட் ஹீரோ பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது.
திரையுலகைப் பொறுத்தவரை ஒரு நடிகரோ, நடிகையோ கதை பிடிக்காமல் தவறவிடும் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பல்வேறு விருதுகளை அள்ளிக்குவிக்கும் சம்பவங்கள் அரங்கேறுவது உண்டு.
தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடம் கிடைக்க மிக முக்கியமான படங்களில் ஒன்று காதலுக்கு மரியாதை. . 1997 ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
காதலுக்காக குடும்பத்தை பிரிய முடிவெடுத்த காதல் ஜோடி, மீண்டும் தனது குடும்பமும் அவர்களுடைய பாசமும் தான் முக்கியம் என காதலை தியாகம் செய்ய முடிவெடுப்பதும், அதற்கு பரிசாக கிடைக்கும் அதிரடி திருப்பமுமே கதை. தமிழ் சினிமாவில் வெளியான காதல் காவியங்களில் இன்று வரை காதலுக்கு மரியாதை படத்திற்கு தனி இடம் உண்டு.
இந்தத் திரைப்படம் ஃபாசில் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன் மற்றும் ஷாலினி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘அணியதிப்ராவு’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக்.
Kadhaluku mariyathai
தமிழ் ரீமேக்கில் முதலில் ஃபாசில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என எண்ணியது அப்பாஸை தானாம். ஆனால், நடிகர் அப்பாஸ்ஸின் மேனேஜர் சரியான நிர்வாகமின்மை காரணமாக கால்ஷீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். இதனால் நடிகர் அப்பாஸ் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக, விஜய் ஒப்பந்தமானார்.