- Home
- Cinema
- Riya Shibu: யார் இந்த ரியா ஷிபு? விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தை தயாரித்த 19 வயது கல்லூரி மாணவி!
Riya Shibu: யார் இந்த ரியா ஷிபு? விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தை தயாரித்த 19 வயது கல்லூரி மாணவி!
விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் 'வீர தீர சூரன்' படத்தின் தயாரிப்பாளருக்கு வெறும் 19 வயது தான் ஆகிறதாம், அதுவும் அவர் ஒரு கல்லூரி மாணவியாம். உங்களால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தயாரித்துள்ளார் ரியா ஷிபு:
இயக்குநர் எஸ் யு அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சாரமுடு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் வீர தீர சூரன். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை, HR Pictures நிறுவனம் மூலமாக ரியா ஷிபு தயாரித்துள்ளார்.
19 வயதில் ஒரு தயாரிப்பாளரா?
இவர் ஒரு கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவியாம். இவருக்கு இப்போது 19 வயது தான் ஆகிறதாம். அதெப்படி 19 வயதில் ஒரு தயாரிப்பாளரா? இவருக்கு எப்படி படம் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது என நீங்கள் யோசிக்கலாம். இவரை பற்றி முழுக்கையாக தெரிந்து கொள்ளுங்கள்.
ஆஸ்கார் கிடைக்கும்னா 4வது குழந்தை பெத்துக்க நான் ரெடி; வீர தீர சூரன் நடிகர் சூரஜ் கலகல பேச்சு!
வீர தீர சூரன்' 2
விக்ரம் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் 'வீர தீர சூரன்' 2-ஆவது பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் முறையாக இரண்டாவது பாகத்தை வெளியிட்ட பின்னர் முதல் பாகத்தை பின்னர் வெளியிட உள்ளது படக்குழு. வரும் மார்ச் 27ஆம் தேதி வியாழக்கிழமை இந்தப் படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடியோ வெளியீட்டு விழா
நேற்று நடந்த இந்த படத்தின், ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ரியா ஷிபு கலந்து கொண்டார். விக்ரம் உள்ளிட்ட படக்குழு அனைவருமே இவரை புகழ்ந்து பேசினார்.
சித்தா பட இயக்குனர் திருமணம்; படையெடுத்து வந்து வாழ்த்திய கோலிவுட்டின் வீர தீர சூரர்கள்!
லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்து வருகிறார்
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ரியா ஷிபு. எப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர். சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்து வருகிறார். அதோடு மலையாளத்தில் உருவாகி வரும் கப்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஒரு கல்லூரி மாணவியாக இருந்து கொண்டு ஒரு படத்தை தயாரிக்க செய்ததது தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
HR Pictures நிறுவனம்
இந்தப் படத்தை தயாரித்துள்ள HR Pictures நிறுவனம் இதற்கு முன்னதாக பல படங்களை விநியோகம் செய்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க படங்கள் என்றால் அது விஜய் சேதுபதியின் மாமனிதன், ராம் சரண், ஜூனியர் என்டிஆரின் ஆர் ஆர் ஆர், சிவகார்த்திகேயனின் டான், கமல் ஹாசனின் விக்ரம், சூரியின் விடுதலை ஆகிய படங்களை விநியோகம் செய்துள்ளது.
வீர தீர சூரன் பார்ட் 2 படத்துக்காக 10 நாள் ரிகர்ஷல் பாத்து எடுக்கப்பட்ட 15 நிமிட சிங்கிள் ஷாட்!
விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தை தயாரித்துள்ளார்:
மேலும், தக்ஸ், மூரா மற்றும் மும்பைக்கார் ஆகிய படங்களை தயாரித்துள்ள HR Pictures நிறுவனம் இப்போது 4ஆவது படமாக விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தை தயாரித்துள்ளார். இவருடைய தந்தை ஷிபு தமீன் ஒரு தயாரிப்பாளர் எனபது குறிப்பிடத்தக்கது.