- Home
- Cinema
- Kayadu Lohar: கயாடு லோகர் மனதை கவர்ந்த செலபிரிட்டி கிரஷ் இந்த தமிழ் நடிகரா? அவரே கூறிய தகவல்!
Kayadu Lohar: கயாடு லோகர் மனதை கவர்ந்த செலபிரிட்டி கிரஷ் இந்த தமிழ் நடிகரா? அவரே கூறிய தகவல்!
Kayadu Lohar Celebrity Crush: டிராகன் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள கயடு லோகர் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தன்னுடைய செலிபிரிட்டி கிரஷ் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.

இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளவர் தான் அசாமை சேர்ந்த நடிகை கயாடு லோகர். 24 வயதே ஆகும் இவர், முதலில் அறிமுகம் ஆனது கன்னடப்படங்கள் மூலம் தான். அதாவது சினிமா மீது இருந்த ஈர்ப்பு காரணமாக, தன்னுடைய 20- வயதிலேயே முகில்பேட் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இளம் வயதில் மாடலிங் துறையில் கால் பதித்த கயாடு
இளம் வயதியிலே மாடலிங் துறையில் கால் பதித்த இவர், கன்னட மொழியை தொடர்ந்து, மலையாளம், மராத்தி போன்ற படங்களில் நடித்த பின்னரே தற்போது தமிழில் அறிமுகமாகி உள்ளது. இவர் நடிப்பில், கடந்த மாதம், ரிலீஸ் ஆன படம் தான் டிராகன்.
இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார்
பால் வண்ண நிறம், எக்கச்சக்க அழகு என தன்னுடைய முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட கயாடு, இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் அதர்வா ஹீரோவாக நடித்து வரும் இதயம் முரளி படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
ஓவர் அழகால் மிஷ்கின் ரிஜெட் செய்த் கயாடு
மேலும் இயக்குனர் மிஷ்கின், தன்னுடைய இயக்கத்தில் தான் கயாடு நடிக்க வேண்டியது என்றால், ஆனால் இவர் மிகவும் அழகாக இருந்ததால் அவரை நான் ரிஜெக்ட் செய்து விட்டேன். நான் தேடியது மிகவும் எதார்த்தமான பக்கத்துக்கு வீட்டு பெண் போன்ற முகம் என கூறி இவர் ரிஜெக்ட் செய்த காரணத்தை தெரிவித்திருந்தார்.
ரூ.2500-க்காக ரோட்டுல டான்ஸ் ஆடினேன்; ரகசியத்தை உடைத்த வரலட்சுமி சரத்குமார்!!
தளபதி விஜய் தான் இவரின் செலபிரிட்டி கிரஷ்
இந்நிலையில் தற்போது நடிகை கயாடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இவருடைய செலபிரிட்டி கிரஷ் யார் என்பது பற்றி அவரிடம் கேள்வி எழுபட்டபபோது இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம், என்னுடைய கிரஷ் தளபதி விஜய் தான். அவர் நடித்த தெறி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம் என கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.