சம்பள விஷயத்தில் நயன்தாராவையே மிஞ்சிய ஷங்கர் பட நாயகி கியாரா அத்வானி!! எவ்வளவு தெரியுமா?
நடிகை கியாரா அத்வானி,(Kiara Advani) இயக்குனர் ஷங்கர் (Shankar) படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி, கேட்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. முதல் படத்திலேயே நயன்தாராவையே (Nayanthara) சம்பள விஷயத்தில் மிஞ்சிவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து பிரபலமான நடிகை கியாரா அட்வனி, இந்தி திரையுலகில் பிஸியான பிறகு, தெலுங்கு சினிமாவை கூட கண்டுகொள்ளவில்லை.
தொடர்ந்து இந்தியில் வெப் சீரிஸில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வந்த இவரை, ராம் சரண் நடிக்கும் படத்தில் நாயகியாக கமிட் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இந்த படத்தில் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது, இதில் நடிகை கியாரா அத்வானியும், கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தெலுங்கு படங்களில் கூட கியாரா அதிக அளவிற்கு கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் பாலிவுட் திரையுலகில் கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார்.
அப்படி பார்த்தல் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா நடிக்கும் படங்களிலும், கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவர் நடிக்கும் இந்த படத்தில் எவ்வளவு சம்பளமாக பெற உள்ளார் என்கிற தகவல் வெளியாகி, முன்னணி நடிகைகளையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்த படத்திற்காக கியாரா அத்வானி, 5 கோடி சம்பளமாக பெற உள்ளாராம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில், கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையே சம்பள விஷயத்தில் மிஞ்சியுள்ளார் என கூறப்படுகிறது. இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வழியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஏற்கனவே கியாரா அத்வானி நடித்திருந்தாலும், தமிழில் இதுவே இவரது முதல் படம்..