- Home
- Cinema
- Divya Bharathi: ஜிவி பிரகாஷ் - சைந்தவி வாழ்க்கைய நான் கெடுத்தேனா? கண்டபடி திட்டுறாங்க - திவ்ய பாரதி விளக்கம்!
Divya Bharathi: ஜிவி பிரகாஷ் - சைந்தவி வாழ்க்கைய நான் கெடுத்தேனா? கண்டபடி திட்டுறாங்க - திவ்ய பாரதி விளக்கம்!
சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் பிரிவுக்கு காரணம், 'பேச்சிலர்' பட நாயகி திவ்யபாரதி என கூறப்பட்ட நிலையில், தற்போது இது குறித்து அவர் கூறியுள்ள தகவல் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Celebrity Divorce:
ஒவ்வொரு வருடமும், விவாகரத்து குறித்து அறிவிக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு, தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் ரவி மோகன், ஜிவி பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய பிரபலங்களின் விவாகரத்து சமாச்சாரம் அதிகம் பேசப்பட்டது.
Rumors
இது போன்ற விவாகரத்து விஷங்கள் வெளியாகும் போது, பலர் உண்மையில்லாத விஷயங்களை கூட உண்மை போல் சமூக வலைத்தளங்களால் குறிப்பிடுவதால், ஒரு சில பிரபலங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள். ரவி மோகன் விவாகரத்து விஷயத்திற்கு காரணம், அவரின் தோழி கெனிஷா என கூறப்பட்டது. பின்னர் ஜெயம் ரவி.. இப்படி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய் என விளக்கம் கொடுத்தார்.
கடற்கரையில் ஹாட் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை திவ்யபாரதி!
GV Divorce Reason
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து விஷயத்திலும், இவர்கள் இருவரின் விவாகரத்துக்கு காரணம்... ஜிவியுடன் 'பேச்சிலர்' படத்தில் நடித்த நடிகை திவ்யா பாரதி என கூறப்பட்டது. இந்த விஷயத்துக்கு, ஜிவி பிரகாஷ் தரப்பில் இருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் ஜிவி மற்றும் சைந்தவி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும், தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு வெளிநாட்டில் நடந்த ஜிவியின் ம்யூசிக் கான்சர்ட்டில், சைந்தவி தன்னுடைய மகளை போ போய் அப்பா கூட டான்ஸ் ஆடு என கூறியதும், இருவரும் சேர்ந்து பாடிய பாடல்களும் வைரலானது.
Divyabharathi is Reason
இதை தொடர்ந்து இருவரும் மீண்டும் மனம் மாறி ஒன்று சேர வேண்டும் என, ஒருபுறம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதே இந்த விவாகரத்துக்கு காரணம் என கூறப்பட்ட, நடிகை திவ்ய பாரதியை பலர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு திவ்யபாரதி வேதனையோடு விளக்கம் கொடுக்கும் விதித்தில் பேசியுள்ளார்.
கோளாறான டிரஸ்.. கவர்ச்சி அலை வீசும் டானாக மாறிய நடிகை திவ்ய பாரதி - ஹாட் பிக்ஸ்!
Diya Bharathi Open Talk
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிவுக்கு காரணம் நானா? உண்மையில் அவங்க ரெண்டு பேரையும் ஜோடியா பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் ஒரு சிலர், அவங்க பிரிய காரணம் நான் தான்னு நெனச்சுக்கிட்டு என்ன திட்டுனாங்க. குறிப்பா பல பெண்கள் என்ன திட்டி கமெண்ட் போட்ட அப்போ... என்ன பேசுறதுனே தெரியாம அந்த காமெண்ட்ஸை கடந்து போனேன் அப்படினு சொல்லி இருக்காங்க. ஜிவி பிரகாஷ் கூட, பேச்சிலர் படத்துல நடிச்ச திவ்யபாரதி இப்போ, ஜிவியோட 25-ஆவது படமா உருவாகி இருக்குற, கிங்ஸ்டன் படத்துலயும் ஹீரோயினா நடிச்சிருக்குறது குறிப்பிடத்தக்கது.