வா...நண்பா, கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கு- நெல்சனுக்காக புது மாப்பிள்ளை விக்னேஷ் சிவன் போட்ட டுவிட் வைரல்
vignesh shivan Tweet : நேற்று வெளியான ரஜினியின் ஜெயிலர் பட போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, இயக்குனர் விக்னேஷ் சிவன் நெல்சனுக்கு ஆதரவாக டுவிட் ஒன்றை போட்டுள்ளார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் படு தோல்வியை சந்தித்தது. இப்படத்தின் தோல்விக்கு நெல்சனின் மோசமான திரைக்கதை தான் காரணம் எனக் கூறி அவரை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வந்தனர். அதுமட்டுமின்றி அவரை கலாய்த்து சோஷியல் மீடியாக்களில் ஏராளமான மீம்ஸ்களும் போடப்பட்டு வந்தன.
அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் படம் வெற்றிபெற்ற போதும் நெல்சனை லோகேஷ் கனகராஜ் உடன் ஒப்பிட்டு ஏராளமான ட்ரோல்கள் வந்தன. ஒரு கட்டத்தில் அது எல்லைமீறி சென்றதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுகுறித்த தனது அதிருப்தியை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.
தோல்வி என்பது அனைவரும் வரும், அது சகஜம் தான், நாளை எனக்கு கூட அப்படி நடக்கலாம், தயவு செய்து யாரையும், யாரோடும் ஒப்பிட்டு பேசாதீர்கள். நெல்சனை விமர்சிப்பதை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. தயவு செய்து இதுபோன்று செய்யாதீர்கள் என லோகேஷ் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் நெல்சனுக்கு ஆதரவாக டுவிட் ஒன்றை போட்டுள்ளார். நேற்று வெளியான நெல்சனின் அடுத்த படமான ரஜினியின் ஜெயிலர் பட போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, வா... நண்பா... வா, தலைவரோட பெஸ்ட் படமா இது இருக்கும். அனிருத்தோடு சேர்ந்து கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி கலக்கு” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த டுவிட் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Madhu Shalini marriage : உடன் நடித்த நடிகரை ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்ட கமல் பட நடிகை