MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vetrimaaran : புது BMW பைக்கில் கெத்து போஸ்.... பொல்லாதவனாக மாறிய வெற்றிமாறன் - வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Vetrimaaran : புது BMW பைக்கில் கெத்து போஸ்.... பொல்லாதவனாக மாறிய வெற்றிமாறன் - வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் வெற்றிமாறன் (vetrimaran), அண்மையில் விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ. பைக் ஒன்றை வாங்கினார். அதன் விலை ரூ.17 லட்சம்.

2 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 01 2022, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெற்றிமாறன். இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் (Polladhavan) படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் தனுஷுடன் இணைந்து ஆடுகளம் (Aadukalam) படத்தை உருவாக்கி வெற்றிகண்ட வெற்றிமாறன். இப்படத்துக்காக அவருக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.

25

ஆடுகளம் படம் மூலம் தேசிய அளவில் கவனிக்கத்தக்க இயக்குனராக உருவெடுத்தார் வெற்றிமாறன். இதையடுத்து 5 ஆண்டு இடைவெளிக்கு பின் இவர் இயக்கத்தில் விசாரணை (Visaranai) திரைப்படம் வெளியானது. விசாரணை கைதி எதிர்கொள்ளும் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டிய இப்படம் தேசிய விருதையும் வென்று அசத்தியது.

35

பின்னர் தனுஷை வைத்து வட சென்னை (Vada Chennai), அசுரன் (Asuran) என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார் வெற்றிமாறன். தற்போது இவர் இயக்கத்தில் விடுதலை (Viduthalai) படம் உருவாகி வருகிறது. இதில் சூரி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

45

விடுதலை படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் (Vaadivaasal) படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது.

55

இதுதவிர படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் வெற்றிமாறன் (vetrimaran), அண்மையில் விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ. பைக் ஒன்றை வாங்கினார். இந்நிலையில், ரைடிங் ஜாக்கெட் அணிந்து அந்த பைக்கில் அமர்ந்தபடி இருக்கும் வெற்றிமாறனின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் பொல்லாதவன் மோடுக்கு மாறிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Thalapathy 66 Update : விஜய்யின் ‘தளபதி 66’ அரசியல் படமா? - அனல் பறக்கும் ஹாட் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வெற்றிமாறன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image2
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image3
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved