வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இனி லீக் ஆக வாய்ப்பே இல்ல... படக்குழுவுக்கு இயக்குனர் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
Varisu movie : வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வருவதால் அப்செட் ஆன இயக்குனர் வம்சி, படக்குழுவுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளாராம்.
தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் வாரிசு. படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் குடும்ப உறவுகளை மையமாக வைத்து தான் இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் ஆஃப் டிசைனராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இப்படத்தில் நடிகர் விஜய் உடன் ஷியாம், சங்கீதா, சம்யுக்தா, சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதையும் படியுங்கள்... இந்தில அரச்ச மாவையே அரைக்குறாங்க... பாலிவுட்டுக்கு பளார் விட்டு கோலிவுட்டுக்கு சபாஷ் சொன்ன இந்தி பட இயக்குனர்
வாரிசு திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரை காண உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் கூட மருத்துவமனையில் நடிகர் விஜய், பிரபு ஆகியோர் நடித்த காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆனது.
இவ்வாறு தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வருவதால் அப்செட் ஆன இயக்குனர் வம்சி, படக்குழுவுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளாராம். அது என்னவென்றால், வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் வீடியோ வெளியாவதை தடுக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... இளையராஜாவிடம் சேர் வாங்ககூட காசில்லையா? லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்த போட்டோவால் வெடித்த சர்ச்சை