MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Shankar Son Arjith : சிவகார்த்திகேயன் படம் மூலம் அறிமுகமாகும் ஷங்கர் மகன் அர்ஜித்!

Shankar Son Arjith : சிவகார்த்திகேயன் படம் மூலம் அறிமுகமாகும் ஷங்கர் மகன் அர்ஜித்!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித், சிவகார்த்திகேயன் படம் மூலம் தமிழ் சினிமாவில் சைலண்டாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 17 2025, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சினிமாவில் அறிமுகமான ஷங்கர் மகன் அர்ஜித்

சினிமாவில் அறிமுகமான ஷங்கர் மகன் அர்ஜித்

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படுபவர் ஷங்கர். ஜெண்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் அடுத்தடுத்து காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன் என வரிசையாக பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனராக கொண்டாடப்பட்டார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த எந்தப் படமும் வெற்றியை ருசிக்கவில்லை.

24
இயக்குனர் ஷங்கர் படங்கள்

இயக்குனர் ஷங்கர் படங்கள்

அதிலும் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. அப்படங்களின் தோல்விக்கு பின்னர் ஷங்கரின் மவுசு குறைந்துவிட்டது. அவர் இன்னும் பழைய காலத்திலேயே இருப்பதாக விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இதனால் தன்னுடைய ரூட்டை மாற்றி வேள்பாரி என்கிற சரித்திர நாவலை மையமாக வைத்து வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்கும் பணிகளில் இறங்கி இருக்கிறார் ஷங்கர்.

இதையும் படியுங்கள்...  ஷங்கரின் அடுத்த பட ஹீரோ இந்த நடிகரின் மகனா? அப்போ கார்த்திருக்கும் செம்ம சம்பவம்!

34
ஷங்கர் மகள் அதிதி

ஷங்கர் மகள் அதிதி

ஷங்கரின் பேமிலியில் இருந்து அவரது மகள் அதிதி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் நடிப்பில் இதுவரை விருமன், மாவீரன், நேசிப்பாயா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். இந்நிலையில், இயக்குனர் ஷங்கரின் மற்றொரு வாரிசும் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் வேறுயாருமில்லை ஷங்கரின் மகன் அர்ஜித் தான்.

44
சிவகார்த்திகேயன் படத்தில் அர்ஜித்

சிவகார்த்திகேயன் படத்தில் அர்ஜித்

அர்ஜித் ஷங்கருக்கும் தன் தந்தையை போல இயக்குனர் ஆகவேண்டும் என ஆசையாம். இதனால் மகனை இயக்குனராக்கும் வேலையில் இறங்கிய ஷங்கர், அவரை தன்னுடைய ஷூட்டிங்கில் பணியாற்றவிட்டால் சரிவராது என முடிவெடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டாராம். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள மதராஸி திரைப்படத்தில் தான் அர்ஜித் ஷங்கர் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இதுவே அவர் பணியாற்றிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Madharasi Glimpse Video : விஜய் கொடுத்த துப்பாக்கியா அது? தூள் பறக்கும் சிவகார்த்திகேயனின் மதராஸி கிளிம்ஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மதராஸி
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினிக்கு தேவா செதுக்கிய இசை சிம்மாசனம்! ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் 'மாஸ்' இன்ட்ரோ பாடல்கள்!
Recommended image2
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image3
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved