Shankar son Arjith : மகளைத் தொடர்ந்து மகனையும் சினிமாவில் களமிறக்கும் ஷங்கர்! இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு
ஷங்கர் மகள் நடிகையானதே பலருக்கும் ஷாக்கிங் சர்ப்ரைஸாக இருந்த நிலையில், தற்போது அவர் தனது மகன் அர்ஜித்தையும் சினிமாவில் களமிறக்க உள்ளாராம்.
தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் என வரிசையாக முன்னணி நடிகர்களை வைத்து, பிரமிக்க வைக்கும் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். கதையில் மட்டுமல்ல, இவருடைய படங்களின் காட்சிகளிலும் பிரமாண்டம் நினைத்ததை விட அதிகமாகவே இருக்கும்.
தமிழில் மட்டுமே படம் இயக்கி வந்த, ஷங்கர் தற்போது டோலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகிற்கும் சென்றுள்ளார். இயக்குனர் ராம் சரணை வைத்து இன்னும் பெயரிடாத படத்தை இயக்கி வரும் இவர், விரைவில் இழுபறியாக இருக்கும் இந்தியன் பட பிடிபிடிப்பையும் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கருக்கு இரண்டு மகள், ஒரு மகன். அதில் மூத்த மகளுக்கு கடந்தாண்டு திருமணம் முடிந்தது. இரண்டாவது மகள் அதிதி ‘விருமன்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார். சூர்யா தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி. இப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார்.
ஷங்கர் மகள் நடிகையானதே பலருக்கும் ஷாக்கிங் சர்ப்ரைஸாக இருந்த நிலையில், தற்போது இயக்குனர் ஷங்கர் தனது மகன் அர்ஜித்தையும் சினிமாவில் களமிறக்க உள்ளாராம். இதை அறிந்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். அர்ஜித் விரைவில் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம்.
டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த அர்ஜித் தற்போது நடிகராக களமிறங்க உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் டைரக்டர் ஆக வேண்டும் என்கிற கனவோடு வந்து சினிமாவில் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஷால், கார்த்தி ஆகியோரின் பட்டியலில் அர்ஜித்தும் இணைவாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.