- Home
- Cinema
- ஷங்கர் மகளுக்கு அடித்த ஜாக்பாட்... சிம்புவை தொடர்ந்து ரொமாண்டிக் இயக்குனரின் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய அதிதி
ஷங்கர் மகளுக்கு அடித்த ஜாக்பாட்... சிம்புவை தொடர்ந்து ரொமாண்டிக் இயக்குனரின் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய அதிதி
Aditi shankar : விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை அதிதி ஷங்கர், அடுத்ததாக ரொமாண்டிக் இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளாராம்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது விருமன் திரைப்படம் தயாராகி உள்ளது. கொம்பன், மருது போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி.
விருமன் படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. தற்போது அப்படத்தின் பின்னணி மற்றும் இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விருமன் படத்தை தொடர்ந்து தெலுங்கில் வெளியான கானி எனும் படத்தில் இடம்பெற்ற ரோமியோ ஜூலியட் என்கிற பாடலை பாடி தனது பாடும் திறமையை வெளிப்படுத்திய அதிதி, அடுத்ததாக கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை கோகுல் இயக்க உள்ளார்.
இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். அதன்படி மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கப்பேலா என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம் அதிதி. இப்படத்தை ரொமாண்டிக் படங்களை இயக்குவதில் பெயர்பெற்ற இயக்குனரான கவுதம் மேனன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... karthi : சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவன்... காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்து நண்பனை நெகிழவைத்த கார்த்தி