MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுப்பதா? அமலாக்கத்துறையை விளாசிய ஷங்கர்

ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுப்பதா? அமலாக்கத்துறையை விளாசிய ஷங்கர்

எந்திரன் கதை திருட்டு வழக்கை காரணம் காட்டி தன் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் செயலுக்கு இயக்குனர் ஷங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Feb 22 2025, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Director Shankar

Director Shankar

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்று தான் எந்திரன். கடந்த 2010-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து இருந்தார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இந்திய சினிமாவிலேயே ஒரு மைல்கல் திரைப்படமாக எந்திரன் பார்க்கப்பட்டது. இப்படம் தான் தற்போது இயக்குனர் ஷங்கருக்கு தலைவலியாக மாறி இருக்கிறது.

24
Enthiran Director Shankar

Enthiran Director Shankar

எந்திரன் திரைப்படம் தான் எழுதிய ஜுகிபா என்கிற கதையை திருடி எடுக்கப்பட்டதாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜுகிபாவுக்கும் எந்திரன் படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதாக நீதிமன்றமே தெரிவித்ததால் அதை எதிர்த்து ஷங்கர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை காரணம் காட்டி இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இதையும் படியுங்கள்.... கதை திருட்டால் கம்பி எண்ண போகிறாரா ஷங்கர்? அமலாக்கத்துறை நடவடிக்கையின் பகீர் பின்னணி!

34
ED Action against Director Shankar

ED Action against Director Shankar

அமலாக்கத்துறையின் இந்த செயலுக்கு இயக்குனர் ஷங்கர் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், “சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக அமலாக்கத்துறையிடம் இருந்து எந்தவித தகவலும் எனக்கு அளிக்கப்படவில்லை. எந்திரன் படம் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கையால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

44
Director Shankar Condemns ED

Director Shankar Condemns ED

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். அத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை தொடர்பாக மறு பரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன். ஒரு வேளை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்” என இயக்குனர் ஷங்கர் பேசி உள்ளார். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்.... எந்திரன் படத்தில் இப்படி ஒரு மிஸ்டேக் இருக்கா? 14 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட ஷங்கரின் கோல்மால் வேலை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குநர் ஷங்கர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved