இந்தியன் 2 படப்பிடிப்பில் பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்... சென்டிமெண்ட் பார்த்து ஷூட்டிங்கை கேன்சல் செய்த ஷங்கர்
இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், அந்த நாளன்று ஷூட்டிங் நடத்த வேண்டாம் என முடிவு செய்த இயக்குனர் ஷங்கர் அன்று ஷூட்டிங்கை கேன்சல் செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்டது. பின்னர் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் தடைபட்டு, மீண்டும் 2020-ம் ஆண்டு முழுவீச்சில் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நிகழ்ந்ததை அடுத்து கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 ஷூட்டிங் 2 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் இருந்தது. இப்படம் கைவிடப்படும் நிலை வரை சென்றதை அடுத்து, ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கடந்தாண்டு இப்படத்தை கையிலெடுத்தது. லைகா நிறுவனத்துடன் இணைந்து அந்நிறுவனமும் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... வீட்டில் கிளி வளர்த்தது குத்தமா? ரோபோ சங்கருக்கு லட்சக்கணக்கில் ஃபைன் போட்டு தீட்டிய வனத்துறை - பின்னணி என்ன?
சென்னை, திருப்பதி என ஷூட்டிங் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 மட்டுமின்றி ராம்சரண் நடிக்கும் ஆர்.சி.15 படத்தின் படப்பிடிப்பையும் ஒரே நேரத்தில் நடத்தி வருகிறார். இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட் படங்களை இயக்குவது இதுவே முதன்முறை. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 19-ந் தேதி இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கை இயக்குனர் ஷங்கர் கேன்சல் செய்துள்ளார்.
ஏனெனில், கடந்த 2020-ம் ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தது அந்த நாளில் தானாம். அதே நாளில் ஷூட்டிங் நடத்த விரும்பாத ஷங்கர், சென்டிமெண்ட் பார்த்து அப்படத்தின் படப்பிடிப்பை அன்று ஒரு நாள் மட்டும் கேன்சல் செய்துள்ளார். அன்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... செல்பி எடுக்க விடாததால் ஆத்திரம்... பிரபல பாடகர் மீது எம்.எல்.ஏ. மகன் தாக்குதல் நடத்திய ஷாக்கிங் வீடியோ இதோ