MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபு தேவா, வடிவேலு; 20 ஆண்டுகள் கழித்து இணையும் வெற்றிக்கூட்டணி? டைரக்டருக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்!

பிரபு தேவா, வடிவேலு; 20 ஆண்டுகள் கழித்து இணையும் வெற்றிக்கூட்டணி? டைரக்டருக்கு கிடைத்த க்ரீன் சிக்னல்!

PrabhuDeva and Vadivelu : தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காமெடி ஜோடிகளாக திகழ்ந்து வந்த பிரபுதேவாவும் வடிவேலும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 12 2024, 07:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Prabhudeva

Actor Prabhudeva

கோலிவுட் சினிமாவை பொறுத்தவரை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த காமெடி நடிகராக வலம் வருபவர் தான் வடிவேலு. இவருடைய உடல் மொழிக்காகவும், டயலாக் டெலிவரிக்காகவும் இவரை ரசிக்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். இவர் தனியாக காமெடி செய்வதை விட, இன்னொரு ஹீரோவோடு இணைந்து காமெடி செய்யும் பொழுது அது வேறொரு தளத்தில் ஹிட் ஆகும். அப்படி நடிகர் வடிவேலு இணைந்து காமெடியில் கலக்கிய பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் உண்டு. அதில் டாப் 3 இடத்தில் இருப்பது பார்த்திபன், சத்யராஜ் மற்றும் பிரபுதேவா.

பிக் பாஸ் வீடு; ரீ-என்ட்ரி கொடுத்த சாச்சனா - வந்த கையோடு அவருக்கு பிக் பாஸ் கொடுத்த எச்சரிக்கை! என்ன அது?

24
Vadivelu

Vadivelu

நடிகர் பிரபுதேவாவோடு "ராசையா" திரைப்பட காலத்திலிருந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் வடிவேலு. பார்த்திபன் வடிவேலு ஜோடிக்கு இணையாக காமெடியில் கலக்குகின்ற ஒரு ஜோடி இருக்கிறது என்றால் அது நிச்சயம் பிரபுதேவா மற்றும் வடிவேலு ஜோடி தான். இவர்களுடைய காம்பினேஷனில் மிஸ்டர் ரோமியோ, லவ் போர்ட்ஸ், மனதை திருடிவிட்டாய் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. 

இறுதியாக கடந்த 2004ம் ஆண்டு மறைந்த பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் நடிப்பில் வெளியான "எங்கள் அண்ணா" என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார்கள். இந்த சூழலில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்த இரண்டு நடிகர்களும் ஒன்றாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரபல இயக்குனர் சக்தி சிதம்பரம் இந்த தகவலை கொடுத்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "சாம்ராட்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அவர்.

34
Kadhalan

Kadhalan

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான காமெடி திரைப்படங்களை தமிழ் மொழியில் கொடுத்தவர் சக்தி சிதம்பரம். சார்லின் சாப்ளின், மகா நடிகன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், போன்ற திரைப்படங்களே அதற்கு சாட்சி என்றே கூறலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இப்பொது வரை மீம்ஸ் மூலம் ஹிட்டாகி வரும் நண்பா என்ன மறந்துட்டியா? மச்சான் என்ன மறந்துட்டியா என்ற பாடலில் தோன்றியவர் தான் சக்தி சிதம்பரம். கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் அவர் திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும், தொடர்ச்சியாக தான் வடிவேலு மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரிடமும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறியுள்ள சக்தி சிதம்பரம் விரைவில் பிரபுதேவா மற்றும் வடிவேலு ஆகிய இருவரையும் வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறியிருக்கிறார்.

44
Sakthi Chidambaram

Sakthi Chidambaram

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் பேசிய இயக்குனர் சக்தி சிதம்பரம்.. பிரபு தேவா மற்றும் வடிவேலு ஆகிய இருவருக்கு இடையில் வாழும் ஒரு பேய் என்று காமடி கலந்த ஒரு ஹாரர் படத்திற்கான கதை ரெடியாக உள்ளது என்றும். அந்த படத்திற்கு பிரபுதேவா மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறியுள்ளார் அவர். மேலும் இப்பொது அவர்கள் நடித்து வரும் பட பணிகளை முடித்த பிறகு அவர்கள் இருவரும் இணைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக சக்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

ஆண்கள் ஆட்சி செய்த தமிழ் சினிமா; தடைகளை உடைத்து முன்னேறிய முதல் பெண் இயக்குனர் - யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
பிரபுதேவா
வடிவேலு
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
குதூகலமாக இருந்த கதிர் - ராஜி... வயித்தெறிச்சலில் திட்டிய கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
நான் சோழன் பொண்டாட்டி டா... ஆதாரத்தை காட்டி அதிர வைத்த நிலா - அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதையில் புதிய டுவிஸ்ட்: மீண்டும் ஒன்று சேர துடிக்கும் தங்கமயில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved