உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் பார்க்க லண்டன் சென்ற அஜித்பட இயக்குனர்- வெறித்தனமான கிரிக்கெட் ரசிகரா இருக்காரே
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை காண அஜித் பட இயக்குனர் லண்டன் சென்று இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடியது. முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆன அந்த அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் ஸ்மித், ஹெட் ஆகியோர் முதல் இன்னிங்சில் சதம் விளாசினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. ரோகித், கில், கோலி, புஜாரா ஆகியோர் வரிசையாக நடையை கட்ட 70 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு ஜடேஜா - ரஹானே ஜோடி சற்று ஆறுதல் அளித்தது. ஆனால் ஜடேஜா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த பரத்தும் சொற்ப ரன்களில் நடையை கட்ட இந்திய அணி தடுமாறி வருகிறது.
இதையும் படியுங்கள்... தலை, கை, முழங்கை என்று அடி மேல் அடி வாங்கும் இந்திய வீரர்கள்; அஸ்வின் சொன்னது நடந்துருச்சு!
இந்திய அணி விளையாடும் போட்டி என்றால், எந்த நாடாக இருந்தாலும் அங்கு கூட்டம் அதிகளவில் வரும். அந்த வகையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை காண இங்கிலாந்திலும் அதிகளவிலான இந்திய ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் இந்த போட்டியைக் காண அஜித் பட இயக்குனர் ஒருவரும் லண்டனுக்கு பறந்து சென்றிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் இயக்குனர் ராஜீவ் மேனன் தான்.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராகவும் வலம் வந்த ராஜீவ் மேனன் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி அசத்தி இருந்தார். இந்நிலையில், தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உடன் அமர்ந்து கண்டுகளித்துள்ளார் ராஜீவ் மேனன் இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... அவுட்டாகிவிட்டால் இப்படித்தான் போய் சாப்பிடுவதா? சோறுதான் முக்கியமா? விராட் கோலியை விமர்சித்த நெட்டிசன்கள்!