vadivelu : வடிவேலு நல்லா குடிப்பார்... அவர் வடிவேலு இல்ல குடிவேலு - பிரபல இயக்குனர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
விஜயகாந்தை குடிகாரர் என்று சொல்லும் வடிவேலு, நன்றாகவே குடிப்பார் என்றும் அவர் வடிவேலு அல்ல குடிவேலு எனவும் இயக்குனர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார். இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தபோது அவருக்கும் அப்படத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதையடுத்து வடிவேலு சில ஆண்டுகள் சினிமா பக்கம் தலைகாட்ட முடியாமல் போனது.
இதனிடையே கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் வடிவேலு. அப்போது அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து பிரச்சாரம் செய்தார். செல்லும் இடமெல்லாம் அவரை ஒரு குடிகாரர் என்றும் விளாசித் தள்ளினார் வடிவேலு. அப்போது வடிவேலுவின் பிரச்சாரம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், தமிழில் ரட்சகன், ஜோடி, ஸ்டார் போன்ற ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி, வடிவேலு குறித்து சமீபத்திய பேட்டியில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : “விஜயகாந்தை குடிகாரர்னு சொல்லும் வடிவேலு மட்டும் குடிக்க மாட்டாரா. அவரும் குடிகாரர் தான். நல்லா குடிப்பார். அவரை வடிவேலு இல்லை குடிவேலுனு தான் சொல்வார்கள்.
இதையும் படியுங்கள்... ஹாலிவுட் ஹீரோவை போல் மிரட்டும் அருண் விஜய்! ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'அச்சம் என்பது இல்லையே' டீசர்!
அன்றைய காலகட்டத்தில் வடிவேலுவுக்கு கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதன் காரணமாக அவர் விஜயகாந்தை தாக்கி பேசினார். அதுமட்டுமின்றி அவருக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையே பிரச்சனையும் ஓடிக்கொண்டிருந்தது. வடிவேலு பகலில் குடிக்க மாட்டார். இரவில் தான் குடிப்பார். வடிவேலுவிடம் 2 லைன் சொன்னா போதும், அதை சீனாக டெவலப் செய்துவிடுவார். அதுவும் ஸ்பாட்டிலேயே அதை செய்வார். அப்படி ஒரு மாபெரும் கலைஞன்.
விஜயகாந்த் குடிப்பதில் பாகுபாடு காட்ட மாட்டார். மேக்கப் மேன், காஸ்டியூமர் ஆகியோருடனும் சரளமாக அமர்ந்து குடிப்பார். அதை நானே பார்த்திருக்கிறேன். இப்போதுள்ள ஹீரோக்களெல்லாம் மேக்கப் மேன்களை சற்று தூரமாகவே வைத்திருக்கிறார். விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு அவரது குடிப்பழக்கம் காரணமில்லை” என்றும் பிரவீன் காந்தி பேசி உள்ளார்.
இதையும் படியுங்கள்... நைட் கிளப்பில்.. போதை மற்றும் செக்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவி மகள்? பீதியை கிளப்பிய போட்டோஸ்!