‘ரஜினிமுருகன் 2’ கதை ரெடி.. சிவகார்த்திகேயனுக்கு டபுள் ஆக்ஷன் - இயக்குனர் பொன்ராம் வெளியிட்ட வேறலெவல் அப்டேட்
ரஜினிமுருகன் இரண்டாம் பாகத்தில் இரண்டு சிவகார்த்திகேயன், இரண்டு சூரி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரை மையமாக வைத்து கதை தயார் செய்துவிட்டதாக இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான். பொன்ராம் இயக்கிய இப்படத்தில் போஸ் பாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் சிவா. இப்படத்தில் சூரி உடன் சேர்ந்து இவர் அடிக்கும் டைமிங் காமெடிகள் இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயனை வைத்து ரஜினிமுருகன் படத்தை இயக்கினார் பொன்ராம். இதுவும் காமெடி கலாட்டா நிறைந்த படமாக இருந்ததால் இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
இப்படி இரண்டு முத்தான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம், அடுத்ததாக இயக்கிய சீமராஜா, எம்.ஜி.ஆர்.மகன் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவின. தற்போது இவர் இயக்கத்தில் டிஎஸ்பி என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். இப்படம் வருகிர டிசம்பர் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் ஜோராக நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள்... நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க தடையா..! வாரிசு நடிகையை துரத்தும் புது சர்ச்சை - பின்னணி என்ன?
அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், இயக்குனர் பொன்ராமிடம் இரண்டாம் பாகம் இயக்கும் ஐடியா இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தனக்கு யுனிவர்ஸ் உருவாக்கும் ஐடியா இருப்பதாக கூறினார். அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்தை விக்ரம் படத்தோடு இணைத்திருந்தது போல் தனது படங்களை இணைக்க உள்ளதாக கூறியுள்ளார் பொன்ராம்.
அதன்படி தனது இயக்கத்தில் வெளியான ரஜினிமுருகன் படத்தின் இறுதி காட்சியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் போஸ் பாண்டி கேரக்டர் இடம்பெறுவது போல் காட்டி இருப்பேன். அதேபோல் ரஜினிமுருகன் இரண்டாம் பாகத்தில் இரண்டு சிவகார்த்திகேயன், இரண்டு சூரி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரை மையமாக வைத்து கதை தயார் செய்துவிட்டதாக கூறினார்.
அதற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்த பொன்ராம், இந்த ஐடியாவை சிவகார்த்திகேயனிடம் சொன்னபோது அவருக்கும் மிகவும் பிடித்துப்போனது. இருவருக்கும் நேரம் கிடைக்கும் போது இப்படம் நடக்கும் என பொன்ராம் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மருமகளாக நயன்தாரா எப்படி?... முதன்முறையாக நயன் பற்றி மனம்திறந்து பேசிய விக்னேஷ் சிவனின் தாயார்