நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க தடையா..! வாரிசு நடிகையை துரத்தும் புது சர்ச்சை - பின்னணி என்ன?
நடிகை ராஷ்மிகா, கன்னட திரைப்படங்களில் நடிக்கவும், அவர் நடித்த படங்களை கன்னடத்தில் ரிலீஸ் செய்யவும் தடைவிதிக்கப்பட உள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட திரையுலகில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ராஷ்மிகா. அப்படம் ஹிட் ஆனதை அடுத்து ராஷ்மிகாவிற்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தெலுங்கில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது அங்கு டாப் நடிகையாக உயர்ந்துவிட்டார் ராஷ்மிகா.
இதுதவிர இந்தியில் 3 படங்கள் தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு என பான் இந்தியா நடிகையாக தற்போது பட்டைய கிளப்பி வருகிறார் ராஷ்மிகா. நடிகை ராஷ்மிகா, சமீப காலமாக தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து வந்தாலும், தன்னை அறிமுகப்படுத்திய கன்னட திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா, கன்னட திரைப்படங்களில் நடிக்கவும், அவர் நடித்த படங்களை கன்னடத்தில் ரிலீஸ் செய்யவும் தடைவிதிக்க கர்நாடக திரையரங்க உரிமையாளர்களும், கன்னட திரைத்துறையினரும் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று டுவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... குட்டியா இருந்தாலும் கியூட்டா இருக்கே... குழந்தைக்கு பெயர்சூட்டிய ஆலியா பட் - அந்த பெயருக்கு இவ்ளோ அர்த்தமா?
நடிகையாக அறிமுகப்படுத்திய கன்னட திரையுலகை நடிகை ராஷ்மிகா, தொடர்ந்து இழிவு படுத்தி வருவதே இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. சமீபத்தில் பாலிவுட் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது கூட தனது முதல் கன்னட படத்தை யார் தயாரித்தது என்றே தெரியாது என்பதுபோல நடிகை ராஷ்மிகா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகை ராஷ்மிகா மீதான தடை உறுதி செய்யப்பட்டால் அவர் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி இதன்மூலம் அவரது பான் இந்தியா நடிகை அந்தஸ்து பறிபோகவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ள நிலையில், ஒரு சிலர் இது வெறும் வதந்தி என்றும் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மருமகளாக நயன்தாரா எப்படி?... முதன்முறையாக நயன் பற்றி மனம்திறந்து பேசிய விக்னேஷ் சிவனின் தாயார்