Director Nelson :நான் ஆல்ரெடி மாட்டிகிட்டு இருக்கேன், ஆளவிடுங்க.. கேலி, கிண்டல்கள் குறித்து மனம்திறந்த நெல்சன்
Director Nelson : பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின் வந்த ட்ரோல்கள் குறித்து இயக்குனர் நெல்சன் சமீபத்திய விருது நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார்.
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கினார். இப்படம் கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதன்பின்னர் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்த நெல்சன், அவர் நடித்த பீஸ்ட் படத்தை இயக்கினார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி திரையரங்குகளில் ரிலீசானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தாலும், விமர்சன ரீதியாக கடும் சறுக்கலை சந்தித்தது.
பீஸ்ட் படத்தின் தோல்விக்கு நெல்சனின் மோசமான திரைக்கதையே காரணம் என ரசிகர்களும், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் சாடினார். இதுதவிர நெட்டிசன்களும் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் ஹிட்டானதை பார்த்த ரசிகர்கள் இப்படத்தை பீஸ்ட்டோடு ஒப்பிட்டு நெல்சனை மீண்டும் ட்ரோல் செய்ய தொடங்கினர்.
இந்த ட்ரோல்கள் குறித்து இயக்குனர் நெல்சன் சமீபத்திய விருது நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார். அந்த விழாவில் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே, இயக்குனர் நெல்சனை மேடைக்கு ஆட வருமாறு அழைத்தார். அதற்கு வர மறுத்த நெல்சன், நான் ஆல்ரெடி மாட்டிக்கிட்டு இருக்கேன், சைலண்டா கீழையே உட்காந்துக்கிறேன்” என தெரிவித்தார். பீஸ்ட் படத்திற்கு பின் வந்த ட்ரோல்களால் தான் நெல்சன் இவ்வாறு கூறியிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Chinmayi : பாட்டி வயசுல கல்யாணம்... நயன்தாராவை கிண்டலடித்த டாக்டருக்கு பளார் விட்ட சின்மயி