Chinmayi : பாட்டி வயசுல கல்யாணம்... நயன்தாராவை கிண்டலடித்த டாக்டருக்கு பளார் விட்ட சின்மயி
Chinmayi : நடிகை நயன்தாராவை மருத்துவர் ஒருவர் கிண்டலடித்து பதிவிட்டுள்ளதை பார்த்த பாடகி சின்மயி, அந்த நபரை கடுமையாக சாடி உள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து அண்மையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான திரையுலக பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்துக்கு பின்னர் இருவரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு, அங்கு போட்டோஷூட் நடத்தி சர்ச்சையிலும் சிக்கினர். ஏனெனில் அங்கு கோவில் வளாகத்தில் நடிகை நயன்தாரா காலணி அணிந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், நடிகை நயன்தாராவை மருத்துவர் ஒருவர் கிண்டலடித்து பதிவிட்டுள்ளதை பார்த்த பாடகி சின்மயி, அந்த நபரை கடுமையாக சாடி உள்ளார். அந்த மருத்துவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நயன்தாரா குறித்து பதிவிட்டுள்ள கமெண்ட்டில், நயன்தாராவின் நடிப்பு திறமைக்கு மதிப்பு தருகிறேன். ஆனால் பாட்டி வயசுல (40 வயது) குடும்பம், குழந்தை என அவரின் இந்த முடிவை நினைக்கும்போது சிரிப்பு வருகிறது. அவருக்கு கருத்தரிப்பு மையங்கள் உதவி செய்யும்னு நம்புகிறேன் என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.
அந்த மருத்துவரின் கமெண்ட்டை பார்த்து கடுப்பான பாடகி சின்மயி, மருத்துவக் கல்லூரிகளில் பாலினப் பாகுபாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சார்பு குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இது கிடைத்தது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை குறித்து இந்த அற்புதமான மருத்துவர் பதிவிட்ட மோசமான கருத்து” என குறிப்பிட்டு அந்த மருத்துவர் பதிவிட்ட கமெண்ட்டின் ஸ்கிரீன் ஷாட்டையும் ஷேர் செய்துள்ளார் சின்மயி.
இதையும் படியுங்கள்... விக்ரம் தந்த வெற்றியால் நடிப்பில் பிசியாகும் கமல்... அப்போ அரசியல் அவ்ளோ தானா? - அவரே சொன்ன விளக்கம்