Director Nelson : பீஸ்ட் படத்தின் நெகடிவ் விமர்சனங்களுக்கு நெல்சன் கொடுத்த பாசிடிவ் பதில்
Director Nelson : ஒரு புறம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய சறுக்கலை பீஸ்ட் திரைப்படம் சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் அபர்ணா தாஸ், செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். அவர் இயக்கத்தில் இதற்கு முன் ரிலீசான கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்கள் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததால், பீஸ்ட் படம் மூலம் நெல்சன் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த ஏப்ரல் 13-ந் தேதி வெளியான இப்படம் விறுவிறுப்பில்லாத கதைக்களம், சலிப்பூட்டும் திரைக்கதை காரணமாக ஏராளமான நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. ஒரு புறம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய சறுக்கலை இப்படம் சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.
பீஸ்ட் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குறித்து அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவிடம் நெல்சன் கூறியதாவது : “அனைவருக்கு பிடிக்கும் என நினைத்து நாம் ஒன்று செய்தோம். அது எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. சரி, அடுத்த படத்தை அனைவருக்கும் பிடிக்கும்படியாக எடுப்போம்” என தோல்வியை கண்டு துவண்டு விடாமல் பாசிடிவாக கூறினாராம். சமீபத்திய பேட்டியில் அவர்கள் இதனை தெரிவித்தனர். இயக்குனர் நெல்சன் அடுத்ததாக ரஜினியின் 169-வது படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Pathu Thala : ‘பத்து தல’ படத்துக்காக சிம்பு எடுக்க உள்ள மிகப்பெரிய ரிஸ்க்... ஒர்க் அவுட் ஆகுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.