- Home
- Cinema
- Pathu Thala : ‘பத்து தல’ படத்துக்காக சிம்பு எடுக்க உள்ள மிகப்பெரிய ரிஸ்க்... ஒர்க் அவுட் ஆகுமா?
Pathu Thala : ‘பத்து தல’ படத்துக்காக சிம்பு எடுக்க உள்ள மிகப்பெரிய ரிஸ்க்... ஒர்க் அவுட் ஆகுமா?
Pathu Thala : நடிகர் சிம்பு அடுத்ததாக பத்து தல படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார்.

உடல் எடையை குறைத்த பின்னர் நடிகர் சிம்புவின் மார்க்கெட் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது நடிகர் சிம்பு கைவசம் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்கள் உள்ளன.
இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்திற்காக நடிகர் சிம்பு 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து வித்தியாசமான கெட் அப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
நடிகர் சிம்பு அடுத்ததாக பத்து தல படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்கிறார். மேலும் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக நடிகர் சிம்பு மீண்டும் உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம்.
இப்படத்துக்கு பின் அவர் நடிக்க உள்ள கொரோனா குமார் படத்துக்காக மீண்டும் உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளாராம். மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்த சிம்பு, பத்து தல படத்துக்காக ரிஸ்க் எடுத்து மீண்டும் உடல் எடையை அதிகரிக்க உள்ளது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... KGF 2 : காத்துவாங்கும் பீஸ்ட்... கலெக்ஷனை அள்ளும் கே.ஜி.எஃப் 2 - முதல் நாளை விட 10-வது நாள் அதிக வசூலாம்