MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி 67-ல் இருந்து இயக்குனர் திடீரென வெளியேறியதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தளபதி 67-ல் இருந்து இயக்குனர் திடீரென வெளியேறியதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தில் இருந்து பிரபல இயக்குனர் திடீரென விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 14 2022, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது. இப்படத்தில் நடித்து முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் விஜய் தாதாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

24

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன. அதில் தற்போது உறுதியாகி உள்ளது சஞ்சய் தத், மற்றும் விஷால் மட்டும் தான். இடையே பிருத்விராஜ், நிவின் பாலி ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் கால்ஷூட் பிரச்சனை காரணமாக அவர்கள் நடிக்க மறுத்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்... உதயநிதியின் கலகத் தலைவன் முதல் கதிரின் யூகி வரை... இந்த வார ரிலீசுக்கு திரையரங்குகளில் வரிசைகட்டும் 8 படங்கள்

34

அதேபோல் இந்த வில்லன் பட்டியலில் அடிபட்ட மற்றொரு பெயர் இயக்குனர் மிஷ்கின். அவரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது. படத்தின் கதை அவருக்கு பிடித்திருந்தாலும், ஒரே ஒரு காரணத்திற்காக அப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விலகிவிட்டாராம். ஏனெனில் இப்படத்தில் நடிக்க அதிக நாட்கள் கால்ஷீட் கேட்டார்களாம். தான் இப்படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டால், தான் அடுத்தாக விஜய் சேதுபதியை வைத்து இயக்க உள்ள படத்தை திட்டமிட்டபடி தொடங்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு தளபதி 67-ல் இருந்து விலகி விட்டாராம் மிஷ்கின்.

44

இயக்குனர் மிஷ்கின் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதுதவிர இவர் இயக்கியுள்ள பிசாசு 2 படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களின் பணிகளை முடித்த பின்னர் வருகிற ஜனவரி மாதம் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் மிஷ்கின். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் முடக்கம்... ஹேக்கர்கள் பதிவிட்ட வீடியோ பார்த்து பதறிப்போன ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved