நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் முடக்கம்... ஹேக்கர்கள் பதிவிட்ட வீடியோ பார்த்து பதறிப்போன ரசிகர்கள்

நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

Ponniyin selvan and sardar movie Actor Karthi facebook page hacked

தமிழ் திரையுலகில் சக்சஸ்ஃபுல் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இவ்வாறு தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த நடிகர் கார்த்தி, தற்போது ஜப்பான் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் குக்கு, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கிய ராஜூ முருகன் தான் ஜப்பான் படத்தையும் இயக்கி வருகிறார் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமாவை போல் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் கார்த்தி.

இதையும் படியுங்கள்...  நாமினேஷனில் சிக்காமல் நழுவிவந்த 3 பேரை கொத்தாக தட்டிதூக்கிய ஹவுஸ்மேட்ஸ்! இந்தவார பிக்பாஸ் எவிக்‌ஷன் லிஸ்ட் இதோ

Ponniyin selvan and sardar movie Actor Karthi facebook page hacked

இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் ஷாக் ஆகிப்போகினர். இன்று காலை கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தில் வீடியோ கேம் விளையாடுவதை வீடியோ எடுத்து நேரலை செய்யப்பட்டு வந்தது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பிப்போய் இருந்தனர்

பின்னர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள கார்த்தி, தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளதை அதில் உறுதி செய்துள்ளார். அதனை சரி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார். நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தை 39 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... டிராக்டர் மோதியதில் பிரபல சீரியல் நடிகை பரிதாப பலி - சோகத்தில் ரசிகர்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios