MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 7 வருஷத்துக்கு பின் 700 கோடியில் பட்ஜெட் படத்தோடு கம் பேக் கொடுக்கும் இயக்குனர்! என்ன கதை தெரியுமா?

7 வருஷத்துக்கு பின் 700 கோடியில் பட்ஜெட் படத்தோடு கம் பேக் கொடுக்கும் இயக்குனர்! என்ன கதை தெரியுமா?

பாகுபலி, கங்குவா போன்ற பிரமாண்ட கதைக்களம் கொண்ட படங்களை மிஞ்சும் விதத்தில் எடுக்கப்பட உள்ள திரைப்படம் குறித்து இயக்குனர் லிங்கு சாமி அறிவித்துள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Feb 25 2025, 01:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பொன்னர் ஷங்கர்:

பொன்னர் ஷங்கர்:

சமீப காலமாகவே இயக்குனர்கள், பிரமாண்ட பட்ஜெட்டில், வரலாற்று சிறப்பு மிகுந்த கதைகளை படமாக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்க்கு வழிவகுத்தது, கலைஞர் கைவண்ணத்தில் பிரஷாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'பொன்னர் ஷங்கர்' படம் என்றாலும், இந்த படத்தின் தோல்வியால் வரலாற்று கதைகள் தமிழில் எடுபடாமல் போனது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ராஜமௌலி இயக்கிய பாகுபலி:

ராஜமௌலி இயக்கிய பாகுபலி:

இதை தொடர்ந்து, இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 20 வருட,  கனவு படமாக பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகமாக எடுத்து முடித்தார். ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகமே பாக்ஸ் ஆபிசில் ரூ.500 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாவது பாகம் ரூ.350 கோடி வசூல் செய்தது.

Keerthy Suresh: 47 வயசு நடிகருக்கு கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு போன இயக்குனர்! காரணம் யார் தெரியுமா?

36
கங்குவா:

கங்குவா:

இதே போல், வரலாற்று மற்றும் ஃபேண்டஸி கதையம்சத்துடன் உருவான படம் தான் 'கங்குவா'. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். ஒரு முழு படமாக பார்க்க இந்த படம் சிறந்த படம் என்றாலும், முதல் அரைமணி நேர படத்தின் கதையில் ஏற்பட்ட தொய்வு மற்றும் பேக் கிரவுண்ட் இசையில் உணர முடிந்த இரைச்சல் போன்றவை இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வர காரணமாக அமைந்தது. ரூ.2000 கோடி வசூல் செய்யும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்த நிலையில்... ரூ.200 கோடி கூட வசூல் செய்யாதது இந்த படத்தின் மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்பட்டது.


 

46
இயக்குனர் லிங்குசாமி:

இயக்குனர் லிங்குசாமி:

இதையெல்லாம் மிஞ்சும் விதத்தில் தற்போது ரூ.700 கோடியில் புதிய படம் எடுக்க உள்ளதாக கூறி பவள இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மம்மூட்டி, முரளி, அப்பாஸ், சினேகா, தேவயானி, ரம்பா ஆகியோர் பலரது நடிப்பில் 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஆனந்தம். இந்த  படம் மூலமாக வெற்றி பட இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்தி கொண்டவர் தான் இயக்குனர் லிங்குசாமி. இந்தப் படத்திற்கு பிறகு ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் போன்ற படங்களை இயக்கினார்.

கமலின் அந்த படம் ஹிட்டுனு சொல்றதெல்லாம் பொய்... அது மிகப்பெரிய தோல்வி படம் - லிங்குசாமி பரபரப்பு அறிக்கை

56
சண்டக்கோழி 2 :

சண்டக்கோழி 2 :

கடைசியாக தமிழ் சினிமாவில் சண்டக்கோழி 2 படத்தை இயக்கினார். அவருக்கு இந்தப் படம் ஹிட் கொடுக்கவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தமிழில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மீண்டும் புதிய படம் இயக்க உள்ளதாக அறிவித்துளளார். அந்தப் படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.700 கோடி என கூறப்படுகிறது. 

66
அர்ஜூனன் மற்றும் அபிமன்யு :

அர்ஜூனன் மற்றும் அபிமன்யு :

மேலும், இந்த படம் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என இரு பாகங்களாக உருவாக உள்ளதாம். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அர்ஜூனன் மற்றும் அபிமன்யு ஆகிய 2 கதாபாத்திரங்களை வைத்து 2 பாகமாக ஒரு படம் இயக்க இருக்கிறேன். இந்தப் படத்திற்கு பட்ஜெட் ரூ.700 கோடி. புதிய தொழில்நுட்பங்களுடன் இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஏற்கனவே மகாபாரதம் தொடர்பான சீரியல்கள் வந்தாலும் அர்ஜூனன் மற்றும் அபிமன்யுவின் கதையை மையப்படுத்தி தனித்தனி படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Paiyaa : சூப்பர் ஹிட்டான பையா.. 14 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் - லிங்குசாமியை கட்டியணைத்து பாராட்டிய தமன்னா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved